அய்யோ கடவுளே.. வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கி தம்பதி துடிதுடித்து உயிரிழப்பு... கதறும் குழந்தைகள்..!

Published : Dec 30, 2020, 07:24 PM ISTUpdated : Dec 30, 2020, 07:33 PM IST
அய்யோ கடவுளே.. வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கி தம்பதி துடிதுடித்து உயிரிழப்பு... கதறும் குழந்தைகள்..!

சுருக்கம்

சென்னையில் மனைவி  மீது மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போது காப்பாற்ற முயன்ற கணவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் மனைவி  மீது மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போது காப்பாற்ற முயன்ற கணவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆவடி அருகே உள்ள அயப்பாக்கத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், தனது மனைவி சசிகலா என்பவருடன் வசித்து வருகிறார். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலைசெய்துவரும் விஜயகுமாரும் அவரது மனைவியும் சொந்த ஊரான விழுப்புரத்திற்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்காகச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தனர். 

அந்த நேரத்தில் குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டரை 'ஆன்' செய்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக, மனைவி சசிகலா மீது மின்சாரம் பாய்ந்தது. அவரைக் காப்பாற்ற முயன்ற கணவர் விஜயகுமார் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 'விஜயகுமார்-சசிகலா' தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!