10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் எப்படி நடத்தப்படுமோ; அதுபோன்று அனைத்து கட்டுப்பாடுகளுடன், திருப்புதல் தேர்வை நடத்தும்படி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
10 மற்றும் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வை, பொதுத்தேர்வு போல பல்வேறு நிபந்தனைகளுடன் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் திடீரென பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்தது. இதனையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கொரோனா தாக்கம் குறைந்து வருவதையடுத்து பள்ளிகள் பிப்ரவரி 1ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளியும் மாணவர்களுக்கு வழக்கமான எட்டு பாட வேளைகளில் வகுப்புகளை நடத்தவும், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்புதல் தேர்வு வருகிற 9-ஆம் தேதி தொடங்குகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 9ம் தேதி முதல் 15ம் தேதி வரையும், 2ம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரையும் நடைபெறுகிறது. அதேபோல் 12ம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9ம் தேதி முதல் 16ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.
undefined
பள்ளி கல்வித்துறை நடத்தும் திருப்புதல் தேர்வுக்கு, முதல் முறையாக, அரசு தேர்வு துறை வழியே, மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட உள்ளது. இந்த தேர்வை, தேர்வுத்துறையின் அனைத்து வகை கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் எப்படி நடத்தப்படுமோ; அதுபோன்று அனைத்து கட்டுப்பாடுகளுடன், திருப்புதல் தேர்வை நடத்தும்படி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வு முடிந்ததும், விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் மதிப்பீடு செய்யக்கூடாது. முதன்மை கல்வி அலுவலக அறிவுறுத்தல்படி, விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.