Chennai Traffic Changes: சென்னை மெட்ரோ கட்டுமானப் பணி காரணமாக OMR சாலையில் போக்குவரத்து மாற்றங்கள்!

By SG Balan  |  First Published Mar 28, 2024, 9:42 PM IST

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக மார்ச் 30ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு மட்டும் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செயல்படுத்தப்படும்.


சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் கந்தன்சாவடி சாலையில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பின்வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் வேளச்சேரி நோக்கி எஸ்.ஆர்.பி. சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை ஏற்படுத்தப்படும். அதற்கு மாற்றாக ஒய்.எம்.சி.ஏ. முன்பு புதிய “U” திருப்பம் செய்து, எஸ்.ஆர்.பி. சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி செல்லலாம்.

கருந்துளை ஆராய்ச்சியில் புதிய மைல்கல்! EHT தொலைநோக்கி பதிவுசெய்த புதிய படங்கள்!

இந்த போக்குவரத்து மாற்றம் மார்ச் 30ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு மட்டும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தப் போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தருமாறும் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஓவர் நைட்டில் கோடீஸ்வரரான ஆட்டோ டிரைவர்... லாட்டரியில் லக் அடித்ததால் ஒரே நாளில் மாறிய வாழ்க்கை!

click me!