தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கீழ்கட்டளை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தாம்பரம்:
முல்லை நகர் டிஎன்எச்பி, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் சாலை, இரும்புலியூர், கிருஷ்ணா நகர், கன்னடபாளையம், ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், குட்வில் நகர், அமுதம் நகர் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கீழ்கட்டளை:
பஜனை கோவில் தெரு, ராஜாஜி நகர், தர்கா சாலை, காமராஜ் நகர், ரேணுகா நகர்.
கோடம்பாக்கம்:
வடபழனி பகுதி முழுவதும், சூளைமேடு பகுதி முழுவதும், ரங்கராஜபுரம், ஆற்காடு சாலை முழுவதும்.
அம்பத்தூர்:
மேனாம்பேடு பானு நகர், ஞானமூர்த்தி நகர், கங்கை நகர், சந்திர சேகாபுரம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர் தொழிற்பேட்டை, தெற்கு நிலர் சாலை, ரெட்டி தெரு, கவரி தெரு, எஸ்.எஸ்.ஓ.ஏ. கட்டிடம், நடேசன் தெரு.
அரும்பாக்கம்:
ஜெய் நகர், வள்ளுவர் சாலை, அன்னை சத்யா நகர், அம்பேத்கர் தெரு, எஸ்.எ.எப்.கேம்ஸ் வில்லேஜ், காந்தி தெரு.
கொடுங்கையூர்:
ஆண்டாள் நகர், அபிராமி அவென்யூ, தென்றல் நகர் 1 முதல் 8 தெருக்கள், விஜயலட்சுமி நகர், கே.எம். கார்டன், தாமோதன் நகர், வியாசர்பாடி புதுச்சேரி.
செம்பரம்பாக்கம்:
பனிமலர் பொறியியல் கல்லூரி, வரதராஜபுரம், பொன்னேரியில் இலுலிப்பட்டு, அழிஞ்சிவாக்கம், ஜெகநாதபுரம், பெரியபாளையம் ரோடு, குதிரைப்பள்ளம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.