கொரோனா ஹாட் ஸ்பார்ட் பகுதியாக சென்னை ஐஐடி அறிவிப்பு... பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு..!

By vinoth kumarFirst Published Dec 15, 2020, 12:25 PM IST
Highlights

சென்னை ஐஐடியில் ஏற்கனவே 104 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 183ஆக உயர்ந்துள்ளது. 

சென்னை ஐஐடியில் ஏற்கனவே 104 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 183ஆக உயர்ந்துள்ளது. 

சென்னை ஐஐடியில் 9 மாணவர் விடுதிகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகை இயங்கி வருகிறது. அங்கு முதலில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐஐடி நிர்வாகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து நேற்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 104ஆக இருந்த நிலையில் இன்று மேலும், 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா  ஹாட் ஸ்பார்ட் பகுதியாக ஐஐடி அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதவர்களுக்கு சென்னை ஐஐடி ஒரு பாடமாக அமைந்துவிட்டது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

click me!