திருவள்ளூர் மாவட்டத்தில் தனது அக்கா வீட்டில் பதுங்கியிருந்த சூர்யாவை அயனாவரம் பெண் உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சென்னை அயனாவரத்தில் போலீஸ் அதிகாரியை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பெண்டு சூர்யாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
தமிழகத்தில் நாளுக்கு குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னையில் சொல்லவே தேவையில்லை. இந்நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் என்ன செய்கிறார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். குற்றச்சம்பவங்களை தடுக்கும் விதமாக சென்னை முழுவதும் போலீசார் விடிய விடிய வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிகாலையில் அயனாவரத்தில் உதவி ஆய்வாளர் சங்கர் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் இருச்சக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை வழிமறித்து சங்கர் விசாரித்தார். அப்போது, 3 பேர் கொண்ட கும்பல் இரும்பி கம்பியால் உதவி ஆய்வாளர் சங்கரை தலையில் தாக்கிவிட்டு தப்பியோடிய முயற்சித்தனர். இதில், அவர் காயமடைந்தார்.
இதனையடுத்து, 2 பேரை போலீசார் விரட்டி பிடித்தனர். ஆனால், பிரபல ரவுடி பெண்டு சூர்யா மட்டும் தப்பித்து தலைமறைவானார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தனது அக்கா வீட்டில் பதுங்கியிருந்த சூர்யாவை அயனாவரம் பெண் உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதையடுத்து அயனாவரம் நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே வரும்போது திடீரென பெண்டு சூர்யா, கத்தியால் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடினார். கத்திக்குத்தில் காவலர்கள் இருவர் படுகாயமடைந்தனர். தப்பியோடிய ரவுடி பெண்டு சூர்யாவை அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் மீனா முழங்காலில் சுட்டு பிடித்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி பெண்டு சூர்யாவுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.