கோயம்பேட்டில் பதற்றம்... மள மளவென பற்றி எரிந்த தீயில் 2 பஸ்கள் நாசம்..!

Published : Jul 27, 2019, 05:12 PM ISTUpdated : Aug 23, 2020, 01:34 PM IST
கோயம்பேட்டில் பதற்றம்... மள மளவென பற்றி எரிந்த தீயில் 2 பஸ்கள் நாசம்..!

சுருக்கம்

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பேருந்துகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.   

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பேருந்துகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. 

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பேருந்துகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 2 ஆம்னி பேருந்துகள் தீ பிடித்து எரிவதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேட்டில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 ஆம்னி பஸ்களில், இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியிலுள்ள பயணிகள் பீதியடைந்து அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். தீ மளமளவென பரவி 3வது பஸ்சையும் நெருங்கிய நிலையில், தகவல் அறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீ பரவாமல் பார்த்துக் கொண்டனர்.

இருப்பினும் 2 ஆம்னி பஸ்களும் முழுவதும் எரிந்துவிட்டன. இந்த தீவிபத்தால் எந்த அசம்பாவிதமும் சம்பமும் நடக்கவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தீ பிற பகுதிகளுக்கும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

Pachaiyappa College: 184 ஆண்டுகால வரலாற்றில் பச்சையப்பன் கல்லூரி புதிய சாதனை! இனி மாணவிகளுக்கும் அனுமதி! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
Chennai 2.0 : நியூயார்க் நகருக்கு இணையாக மாறப்போகும் சென்னை! - CM விஜய்யின் மாஸ்டர் பிளான்