Public Exam: மாணவர்கள் கவனத்திற்கு.. 11ம் வகுப்புகளுக்கு தேர்வு அட்டவணை வெளியானது..!

Published : Mar 02, 2022, 02:15 PM IST
Public Exam: மாணவர்கள் கவனத்திற்கு.. 11ம் வகுப்புகளுக்கு தேர்வு அட்டவணை வெளியானது..!

சுருக்கம்

11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதி காலை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்வு தொடர்பான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதி காலை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்வு தொடர்பான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்சனையால், தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு செப்டம்பர் முதல் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுஅதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியதாக கூறப்பட்டது. இதையடுத்து, பொதுத்தேர்வுக்கான அட்டவணை அறிவிப்பு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்  காலை தேர்வு தேதியை மட்டும் வெளியிட்டிருந்தார். அதில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ல் தொடங்கி 30ம் தேதியும் முடிவடையும் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது 11ம் வகுப்பு தேர்வுக்காண அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

11ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை விவரம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!