10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து..? புதிய முறையை கையில் எடுக்கும் பள்ளி கல்வித்துறை..!

By vinoth kumarFirst Published Mar 27, 2020, 12:13 PM IST
Highlights

ஏப்ரல்10-ம் தேதிக்குள்  கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராவிட்டால், புதிய திட்டத்தை செயல்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், மாநில அளவிலான 10-ம்  வகுப்பு பொதுத்தேர்வை  ரத்து செய்து விட்டு மாவட்ட அளவிலான தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. அப்படி இல்லையென்றால் காலாண்டு, அரையாண்டு முடிவுகளின் படி தேர்ச்சி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

கொரோனா வைரஸ் எதிரொலியாக மாநில அளவிலான 10-ம்  வகுப்பு பொதுத்தேர்வை  ரத்து செய்து விட்டு மாவட்ட அளவிலான தேர்வை நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், தற்போது 198 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மார்ச் 31-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுவதாக மத்திய மற்றும் மாநில அரசு அறிவித்திருந்தது. 

இந்நிலையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்த தேர்வுகள் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கும் என்றும் கூறியிருந்தார். இதனிடையே, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்தியததாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில், ஏப்ரல்10-ம் தேதிக்குள்  கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராவிட்டால், புதிய திட்டத்தை செயல்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், மாநில அளவிலான 10-ம்  வகுப்பு பொதுத்தேர்வை  ரத்து செய்து விட்டு மாவட்ட அளவிலான தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. அப்படி இல்லையென்றால் காலாண்டு, அரையாண்டு முடிவுகளின் படி தேர்ச்சி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சமூக பரவலை தடுக்கும் விதமாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை  தரப்பில் கூறப்பட்டுகிறது. 

click me!