FIFA World Cup 2022 Winner: லியோனல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா பிஃபா உலகக் கோப்பை கைப்பற்றி ஓராண்டு நிறைவு!

By Rsiva kumarFirst Published Dec 18, 2023, 6:43 PM IST
Highlights

லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி பிஃபா உலகக் கோப்பையை கைப்பற்றி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

பிஃபா 22ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது. அர்ஜெண்டினா பிஃபா கால்பந்து உலகக் கோப்பையை வென்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதிப் போட்டியில் குரோஷியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்தது. இறுதிப் போட்டியில் பிரான்ஸை எதிர்கொண்டது.

ஜியோசினிமா ஐபிஎல் மாதிரி ஏலம் – சிஎஸ்கே-காக டிராவிஸ் ஹெட்டை ரூ.7.5 கோடிக்கு ஏலம் எடுத்த சுரேஷ் ரெய்னா!

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி 22ஆவது பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் கத்தாரில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில், 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்த லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா இறுதிப் போட்டிக்கு காலடி எடுத்து வந்தது.

இதில் ஒவ்வொரு நிமிடமும் அர்ஜெண்டினா வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியை மேற்கொள்ள பிரான்ஸ் வீரர்கள் தடுத்துக் கொண்டே இருந்தனர். அப்போது தான் அர்ஜெண்டினாவிற்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்ஸி முதல் கோல் அடித்து அர்ஜெண்டினாவை 1-0 என்று முன்னிலை படுத்தினார். இதையடுத்து தான் போட்டியின் 36ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா 2ஆவது கோல் அடித்து முதல் பாதி போட்டியில் 2-0 என்று முன்னிலை பெற்றது.

IPL Auction: கம்மின்ஸ், ஸ்டார்க் எல்லாம் ரூ.14 கோடிக்கு அதிகமாக ஏலம் எடுக்கப்படுவார்கள் – அஸ்வின் கணிப்பு!

அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட பிரான்ஸ் அணி கிடைத்த பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஒரு கோல் அடித்தது. கைலியன் எம்பாப்வே இந்த கோல் அடித்து அடித்தார். இதையடுத்து மீண்டும் ஒரு கோல் அடித்த எம்பாப்வே 2-2 என்று சமன் செய்தார். பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

கடைசியாக கிடைத்த போட்டியின் 109 ஆவது நிமிடத்தில் எமி மார்டினெஸ் பந்தை கோல் நோக்கி அடிக்க அதனை பிரான்ஸ் கோல் தடுத்தார். எனினும், பந்து அவர் மீது பட்டு திரும்பி வந்தது. அப்போது உஷாராண மெஸ்ஸி பந்தை கோல் வலைக்குள் திருப்பினார். இதனால், அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. போட்டி முடிய 4 நிமிடங்கள் இருந்த நிலையில், பிரான்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்ட்சி வாய்ப்பில் கைலியன் எம்பாப்வே கோல் அடிக்கவே பிரான்ஸ் 3-3 என்று சமநிலை பெற்றது. கூடுதலாக கொடுக்கப்பட்ட நேரத்திலும் இரு அணிகள் சமநிலை பெற்றன. இதனால், பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

Pink ODI Match: பிங்க் நிற ஒருநாள் போட்டியில் வெற்றி - முதல் இந்திய கேப்டனாக கேஎல் ராகுல் வரலாற்று சாதனை!

இதில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்வே ஒரு கோல் அடிக்க, லியோனல் மெஸ்ஸியும் ஒரு கோல் அடித்தார். 2ஆவது வாய்ப்பை பிரான்ஸ் கோட்டைவிட்டது. ஆனால், அர்ஜெண்டினாவின் 2ஆவது வாய்ப்பில் டைபலா கோல் அடித்தார். 3ஆவது வாய்ப்பையும் பிரான்ஸ் கோட்டைவிட்டது. அர்ஜெண்டினாவின் டேனியல் பரடேஸ் ஒரு கோல் அடிக்கவே அர்ஜெடினா 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 4ஆவது வாய்ப்பி பிரான்ஸ் வீரர்ம் முவானி ஒரு கோல் அடித்தார். இறுதியாக அர்ஜெண்டினாவின் கோன்சலோ மோண்டில் ஒரு கோல் அடிக்க 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா 36 ஆண்டுகளுக்கு பிறகு 3ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

IPL Auction: ஸ்ரீகாந்த் நடத்திய மாதிரி ஏலம் – ரூ.17.5 கோடிக்கு வாங்கப்பட்ட டிராவிஸ் ஹெட், ரச்சின் ரவீந்திரா!

இதற்கு முன்னதாக, 1978 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் அர்ஜெண்டினா பிஃபா உலகக் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜெண்டினா டிராபி வென்று இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் டைபலா, டேனியல் பரடேஸ் ஆகியோரும் முக்கியமானவர்கள். ஆனால், கடைசி வரை மெஸ்ஸி மட்டுமே கேமராவில் காட்டப்பட்டார்.

click me!