ஒரு கிளாஸ் தண்ணீரை வைத்து இதை செய்தால் போதும்.. பணவரவு தங்கு தடையின்றி வந்து கொண்டே இருக்குமாம்..

Published : Oct 26, 2023, 12:26 PM ISTUpdated : Oct 26, 2023, 12:32 PM IST
ஒரு கிளாஸ் தண்ணீரை வைத்து இதை செய்தால் போதும்.. பணவரவு தங்கு தடையின்றி வந்து கொண்டே இருக்குமாம்..

சுருக்கம்

நாம் சம்பாதிக்கும் பணம் வீண் விரயமாகாமல் இருக்கவும், பணம் பல மடங்கு பெருகவும் ஒரு எளிய பரிகாரம் உள்ளது.

எவ்வளவு சம்பாதித்தாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்பதே பெரும்பாலான நடுத்தர மக்களின் புலம்பலாக உள்ளது. என்ன தான் பட்ஜெட் போட்டு, குடும்பம் நடத்தினாலும் திடீரென ஏற்படும் மருத்துவ செலவு போன்ற திடீர் செலவுகளால் பணம் விரயமாகிவிடும். இதனால் வழக்கமான செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் பல குடும்பங்கள் நிதி நெருக்கடியில் சிக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலை எப்போது மாறும் என்பதே அனைவரின் ஏக்கமாக உள்ளது.

அந்த வகையில் நாம் சம்பாதிக்கும் பணம் வீண் விரயமாகாமல் இருக்கவும், பணம் பல மடங்கு பெருகவும் ஒரு எளிய பரிகாரம் உள்ளது. அதற்கு ஓர் எளிய பரிகாரம் உள்ளது. ஒரே ஒரு டம்ளர் தண்ணீர்  இருந்தால் போதும் இந்த பரிகாரத்தை செய்துவிடலாம். ஒரு மனிதனின் எண்ணங்களையும், உணர்வுகளையும் கிரஹிக்கும் தன்மை தண்ணீருக்கு உண்டு. கோயில்களுக்கு அருகில் குளங்கள் இருப்பதற்கு காரணமும் இதுதான். கோயில் குளங்களில் இருக்கும் தண்ணீரும் கோயிலின் நேர்மறை சக்தியை ஈர்க்கக்கூடியது. இதனால் தான் கோயில் குளங்களில் குளித்தால் பாவங்கள் போக்கும் என்று முன்னோர்கள் சொல்லி உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்படிப்பட்ட தண்ணீரை வைத்து தான் இந்த பரிகார முறையை செய்யலாம். தினமும் இந்த முறையை பின்பற்றலாம். தெற்கு திசையை தவிர, வேறு எந்த திசையில் வேண்டுமானாலும் நீங்கள் உட்கார்ந்து கொள்ளலாம். உங்கள் முன்னால் ஒரு கிளாஸ் அல்லது சொம்பில் தண்ணீரை வைக்க வேண்டும். உட்கார்ந்து கொண்டு தான் இந்த முறையை செய்ய வேண்டும். 2 நிமிடங்கள் அமைதியாக உங்கள் உள்மூச்சு, வெளிமூச்சை கவனிக்க வேண்டும். பின்னர் உங்கள் மனம் அமைதி அடைய தொடங்கும்.

 

திருமணத்திற்குப் பிறகு கணவருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் 4 ராசி பெண்கள்; இதுல உங்க ராசி இருக்கா?

அப்போது உங்கள் வலது கையில் தண்ணீர் கிளாஸை எடுத்துக்கொண்டு “ஓம் ரீங், வசி வசி, தனம் தனம், தினம் தினம்” என்ற மந்திரத்தை 11 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை கண்களை மூடிக்கொண்டும் செய்யலாம் அல்லது திறந்துகொண்டும் செய்யலாம். வேக வேகமாக இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது. பொறுமையாக சொல்ல வேண்டுமாம். மந்திரத்தை சொன்ன பிறகு அந்த தண்ணீரை நீங்கள் குடிக்க வேண்டும். அந்த தண்ணீரை வீணாக்கக்கூடாது என்பதால் உங்களால் எவ்வலவு குடிக்க முடியுமோ அந்தளவு மட்டும் தண்ணீரை எடுத்துக்கொண்டு இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

தொடர்ந்து 30 நாட்கள் இந்த முறையை தொடர்ந்து பின்பற்றினால், எதிர்பாராத விதமாக பண வரவு அதிகரிக்கும். பணம் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்று நினைப்பவர்களும், கோடீஸ்வரராக வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த எளிய முறையை செய்து பார்க்கலாம். பணம் வீட்டில் தங்குவது மட்டுமின்றி, வீண் விரயம் ஆகாமல் இருக்கும்.பணத்தை ஈட்டுவதற்கான புதுப்புது வழிகளும் உங்களை தேடி வருமாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: ஆசிர்வதிக்கும் அஷ்டமி திதி.! அருளை அள்ளித்தரும் அற்புதநாள் எப்படி தெரியுமா?
சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!