ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை ஏன் இவ்வளவு சிறப்பாக பார்க்கப்படுகிறது என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.
ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை என்பது அம்மனுக்கு கூழ்வார்த்தல் பண்டிகை கொண்டாடுவது ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா எல்லா கோவில்கள் மற்றும் வீடுகளிலும் விமர்சையாக நடத்தப்படுகிறது. மேலும் இந்நாளில் கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைத்து, அம்மனை வழிபாடு செய்து அருள் பெறுவார்கள்.
அதுபோல், ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை அன்று உங்களால் இயன்ற உதவியை பிறருக்கு செய்யுங்கள். ஆடி வெள்ளி மட்டுமல்லாமல், ஆடி ஞாயிற்றுக்கிழமையும் வீடுகளில் அம்மன் எழுந்தருளுவாள். எனவே அந்நாளில் வீடுகளில் கூழ்வார்த்து உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் வீடுகளுக்கும் மற்றும் பிறருக்கும் கூழ்வார்த்து கொடுத்தாள், அம்மன் அருள் உங்களுக்கு கிடைக்கும். மேலும் கூழ் ஊற்றி அம்மனை வணங்கினால் உங்களது நோய்கள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியத்துடன் வாழுவீர்கள்.
undefined
இதையும் படிங்க: Aadi Perukku 2023: ஆடிப்பெருக்கு குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!!
கன்னி தெய்வ வழிபாடு ஏன்?
ஆடி ஞாயிற்றுக்கிழமை என்றால் அது கன்னி தெய்வத்தை வழிபட கூடிய நாள் ஆகும். கன்னி தெய்வம் என்பது, வீட்டில் இருக்கும் ஒரு பெண் சிறு வயதிலேயே அல்லது திருமணம் ஆகாமல் இயற்கை முறை அல்லாமல் மரணம் அடைந்திருப்பார்கள். இவர்களை தான் அந்த குடும்பத்தினர் கன்னி தெய்வமாக நினைத்து வழிபடுவார்கள் எனவே, ஒவ்வொரு ஆடி ஞாயிற்று அன்று வீட்டின் கன்னி தெய்வத்தை முழுமனதுடன் நினைத்து பூஜை செய்து வழிப்பாடு செய்ய வேண்டும். ஏனெனில், அந்த குடும்பத்தாருக்கு கன்னி தெய்வத்தின் ஆசீர்வாதம் மிக மிக அவசியம்.