எக்காரணத்தைக் கொண்டும் சமைக்கும்போது இந்த தவறை செய்யாதீங்க..வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன?

By Kalai Selvi  |  First Published May 20, 2023, 6:41 PM IST

இந்து மத நூல்களில் சமையல் தொடர்பான பல விதிகள் உள்ளன. இந்த விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதே நேரத்தில், தவிர்க்கப்பட வேண்டிய சில தவறுகளும் விளக்கப்பட்டுள்ளன.


இந்து மத நூல்களில், வீட்டு சமையலறை தொடர்பான பல விதிகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளில், சமைக்கும் போது பொதுவாக என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. சாஸ்திரங்களின்படி, சமையலறையில் சமைக்கும் போது பின்பற்றுவதற்கு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும் சில விதிகள் உள்ளன. சமைக்கும் போது இவற்றை கடைபிடிக்கவில்லை என்றால் கெடுதல் உண்டாகும். எனவே, என்ன தவறுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வாஸ்து முதல் ஜோதிடம் வரை, சமையலறை வீட்டின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. சமையலறை குறித்து வாஸ்து எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கின்றதோ அதே அளவு ஜோதிடமும் முக்கியமாக வகிக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். எனவே இவற்றின் படி, நாம் சமையலறையில் சமைக்கும் போது சில விஷயங்களை பின்பற்றினால் வீட்டிற்கு செழிப்பு வரும்.

Latest Videos

undefined

இதையும் படிங்க: உங்க கைக்கு எப்பவும் பணம் வந்து கொண்டே இருக்கணுமா? இந்த 1 பொருளை பூஜை அறையில் வைங்க! பணக்கஷ்டமே வராது!!

சமையலறையில் சமைக்கும் போது பின்பற்ற வேண்டியவை:

  • குளிப்பதற்கு முன் சமையலறைக்குச் செல்லாதீர்கள் அல்லது உணவு சமைக்காதீர்கள். அத்தகைய உணவு தூய்மையற்றது என்று கூறப்படுகின்றது.
  • நீங்கள் சாப்பிடும் முன் பசுவிற்கு உணவு வழங்க வேண்டும், அவ்வாறு வழங்குவதன் மூலம் உங்கள் வீட்டில் தோஷம் நீங்கி மகிழ்ச்சி வரும்.
  • மன அழுத்தத்துடன் ஒருபோதும் சமைக்காதீர்கள். குழப்பமான மனதால் தயாரிக்கப்படும் உணவு, வீட்டில் துன்பத்தையும் எதிர்மறையையும் உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. 
  • நீங்கள் ஒருவருக்கு ஒரு தட்டு உணவைக் கொடுத்தால், அதை இரண்டு கைகளால் கொடுங்கள். இரண்டு தட்டுகளை ஒன்றாக பரிமாறுவதை தவிர்க்கவும். 
  • சமைப்பதற்கு முன்னும் பின்னும் சமையலறையை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.
  • மேலும் சமைப்பதற்கு முன் நமக்கு உணவு தரும் கடவுளை நினைத்துக் கொள்ளுங்கள். சமைத்தப் பிறகு அந்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
  • உங்கள் முடியை கட்டிய பிறகு சமைக்க தொடங்கவும். திறந்த முடியுடன் சமைப்பது நல்லதல்ல. மேலும் 
  • உணவில் முடி உதிர்வதையும் தடுக்கிறது. 

இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் இருந்து தோஷம் நீங்குவதோடு மட்டுமல்லாமல் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

click me!