பொன்னும் பொருளும் உங்கள் வீடு தேடி வர, வெள்ளிக்கிழமையில் வந்திருக்கும் இந்த அம்மாவாசை நாளில் தேவி மகாலட்சுமியின் அருள் கிடைக்க இந்த பரிகாரங்களை செய்யுங்கள். செல்வம் தானாக வரும்.
ஒவ்வொரு அமாவாசை நாளிலும் நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, வீட்டில் இருக்கும் கண் திருஷ்டிகள் போக பரிகாரம் செய்வது போன்றவற்றை தான் நாம் பெரும்பாலும் செய்கிறோம். ஆனால் இந்த அமாவாசையில் பொன்னும் பொருளும் நம்மை தேடி வர தேவி மகாலட்சுமியின் பரிபூரண அருளையும் பெற ஒரு எளிய பரிகாரம் செய்ய வேண்டும். அப்படி என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மகாலட்சுமி அருள் பெற செய்ய வேண்டிய பரிகாரம்:
undefined
பரிகாரம் - 1
பரிகாரம் - 2
இந்த பரிகாரம் செய்ய மஞ்சள் நிற பட்டுத் துணியை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு கைப்பிடி அளவு உப்பு, ஐந்து ரூபாய் நாணயம் ஒன்று மற்றும் சிறிய அளவுள்ள தங்கம் அல்லது வெள்ளி வைக்கவும். ஒருவேளை இவை இல்லை என்றாலும் பரவாயில்லை. பின் துணியை மஞ்சள் நிற நூலால் முடிச்சை கட்டி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, சாம்பிராணி தூபம் காட்டி, உங்கள் குலதெய்வம் மற்றும் தேவி மகாலட்சுமியை மனதார நினைக்கவும். மேலும் உங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கவும், உங்களுக்கு பொன்னும் பொருளும் கிடைக்கவும், நல் ஆசியுடன் வாழ வேண்டும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
பின் இந்த முடிச்சை உங்கள் வீட்டின் நிலை வாசலில் காலையில் 10 லிருந்து 11, மதியம் 1 லிருந்து 2, மாலை 6 லிருந்து 7, இரவு 8 மணியில் இருந்து 9 இப்படியாக நான்கு வேளையில் இதை கட்டவும். அடுத்த அமாவாசை வரும் வரைந்து முடிச்சு அப்படியே இருக்கட்டும். அதன் பின் இந்த முடிச்சை கழற்றி உப்பை கால்படாத இடத்தில் போடவும். துணியை அலசி காய வைத்து மறுபடியும் உப்பு , ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து மறுபடியும் இதே போல் பூஜை அறையில் வைத்து பூஜை செய்த பின்பு உங்கள் நிலை வாசலில் கட்டி விடுங்கள். தேவி மகாலட்சுமி அருள் கிடைக்க இந்த முடிச்சு எப்போதும் உங்கள் வீட்டில் இருக்கட்டும்