வராகி அம்மனுக்கு இவர்களை தான் மிகவும் பிடிக்குமாம்.. பிடிக்காதவர்கள் யார் தெரியுமா?

By Ramya s  |  First Published Aug 29, 2023, 12:04 PM IST

ஜோதிட சாஸ்திரப்படி 4 நட்சத்திரங்கள் அன்னை வராகி அம்மனுக்கு விருப்பமான நட்சத்திரங்கள் என்று கூறப்படுகிறது. 


இந்த உலகில் இருக்கு சிறிய புழு பூச்சிகள் முதல் மனிதர்கள் வரை அனைவரும் அந்த இறைவனால் படைக்கப்பட்டவர்கள் தான். இந்த உலகத்திற்கே தாயாக இருந்து பாதுகாப்பது அந்த பார்வதி தேவி தான். பார்வதி தேவிக்க்கு பல வடிவங்கள், பல அவதாரங்கள் உள்ளன. அப்படி அந்த பார்வதி தேவியின் வடிவமே இந்த வராகி அம்மன். சக்திவாய்ந்த தெய்வங்களில் ஒன்றாக வராகி அம்மன் தனது பக்தர்கள் நினைத்ததை நிறைவேற்றும் சக்திகொண்டவர். ஜோதிட சாஸ்திரப்படி 4 நட்சத்திரங்கள் அன்னை வராகி அம்மனுக்கு விருப்பமான நட்சத்திரங்கள் என்று கூறப்படுகிறது. 

கார்த்திகை, பூரம், தாரம், ரேவதி, இந்த நான்கு நட்சத்திரங்களும் வராகி அம்மனுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த 4 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வராகி அன்னையிடம் என்ன வரம் கேட்டாலும் உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் இந்த நட்சத்திரம் இல்லாதவர்கள், அந்த நட்சத்திரம் வரும் நாளில் வராகி அம்மனை வழிபட்டால், அம்மனின் அருளை பெறலாம்.

Latest Videos

undefined

ஆனால், வராகி அம்மனுக்கு பிடிக்காதவர்களும் சிலர் உள்ளனர். அவர்கள் யார் தெரியுமா? கெட்ட எண்ணம் கொண்டவர்கள். பிறரை அழிய வேண்டும் என்று நினைப்பவர்கள், அடுத்தவர்கள் மீது பில்லி, சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றலை ஏவிவிடுபவர்கள். இத்தகைய குணங்கள் கொண்ட நபர்களை வராகி அம்மனுக்கு பிடிக்காது. மனதில் தீய எண்ணங்களுடன் யாரும் வராகி அம்மனை நெருங்க முடியாது.

வராகி அம்மனுக்கு ஏற்ற வேண்டிய விளக்கு என்ன?

ஒவ்வொரு செவ்வாய் கிழமை அன்றும் வாரந்தோறும் அன்னை வாராஹி சன்னிதானம் அமைந்துள்ள கோவிலுக்கு சென்று வாருங்கள். அங்கே வாழை இலையில் பச்சரியை பரப்பி வைத்து, தேங்காயை இரண்டாக உடைத்து, பச்சரிசி மீது அந்த தேங்காயை வைக்க வேண்டும். தேங்காயில் இலுப்பை எண்ணெய் ஊற்றி, சிகப்பு நிற திரி போட்டு தீபம் ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டால், எவ்வளவு சிரமம் ஏற்பட்டாலும், வராகி அம்மன் ஏதேனும் ஒரு வடிவத்தில் வந்து உங்களுக்கு உதவி உங்கள் கஷ்டங்களை போக்குவாள். தொடர்ந்து ஐந்து செவ்வாய் கிழமைகள் இந்த தீபத்தை ஏற்றி வர நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை. தனத் பக்தர்களை வராகி அம்மன் ஒருபோதும் கைவிடமாட்டார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.  

click me!