திருவண்ணாமலை பரணி தீபம், மகா தீபம்.. ஆன்லைனில் அனுமதி சீட்டு பெறுவது எப்படி? எப்போது விற்பனை தொடக்கம்?

By vinoth kumar  |  First Published Nov 23, 2023, 11:55 AM IST

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் கார்த்திளை தீபத்திருவிழா நவம்பர் 26ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. 


திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான பரணி தீபம் மற்றும் மகா தீபம் காண அனுமதி சீட்டுகளை பெறுவதற்கான நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் கார்த்திளை தீபத்திருவிழா நவம்பர் 26ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. பரணி தீபம் தரிசனம் காண ரூ.500/- கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், அன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் தரிசனம் காண ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகளும், ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதி சீட்டுகளும் என மொத்தம் 1,600 அனுமதி சீட்டுகள் இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.  

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- "பரணி தீபம்‌" ஏன்.. எப்போது.? அதன் பலன்கள் மற்றும் முறை இதோ!

ஆன்லைனில் அனுமதி சீட்டு பெறுவது எப்படி?

* அனுமதி சீட்டுக்களை https://Annamalaiyar.hrce.tn.gov.in என்ற அருணாசலேசுவரர் திருக்கோயில் இணையதள வழியாக பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 24ம் தேதியன்று காலை 10 மணிக்கு விற்பனை தொடங்குகிறது. 

* கட்டண அனுமதிச் சீட்டுகளைப் பெற விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்..

*  ஒரு ஆதாா் அட்டைக்கு ஒரு கட்டண அனுமதிச் சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். 

*  கட்டண அனுமதிச் சீட்டு பதிவு செய்தவுடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் எண் (ஓ.டி.பி.) குறுஞ்செய்தி பதிவு செய்தவரின் கைபேசி எண்ணுக்கு வரும்.

*  கட்டண அனுமதிச் சீட்டு பதிவுக்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*  ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து பரணி தீப தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் நவம்பா் 26-ம் தேதி அதிகாலை 2 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

*  மகா தீப தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் நவம்பா் 26-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

*  பரணி தீபம், மகா தீப நிகழ்வுகளை காண வரும் பக்தா்கள் அசல் கட்டண அனுமதிச் சீட்டு மற்றும் ஆதாா் அடையாள அட்டை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்துக்கு கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் (திட்டி வாயில்) வழியே வர வேண்டும்.

*  குறிப்பிட்ட நேரத்துக்குள் வராத பக்தா்கள் கண்டிப்பாக கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டாா்கள்.

இதையும் படிங்க;-  Tiruvannamalai Deepam: கார்த்திகை தீபத் திருவிழா.. மலை ஏறும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

click me!