இறைவன் ஒளி வடிவில் இருப்பதால் நாம் தினமும் தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லா மங்களகரமான வாழ்வையும் நமக்குத் தந்து பிரகாசிக்க செய்வார்.
இந்து மாதத்தை பின்பற்றுவோர் ஒவ்வொரு வீட்டிலும் மற்றும் பூஜை அறையிலும் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அதிலும் குறிப்பாக செவ்வாய் வெள்ளி கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுத்துவது மிகவும் விசேஷமானது. அந்த வகையில், தற்போது கார்த்திகை மாதம் நடந்து கொண்டிருக்கிறது. இம்மாதத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தையை பூஜை அறையில் விளக்கேற்ற சொல்லுங்கள். இதனால் பலவிதமான பலன்களை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
பொதுவாகவே வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் காலம் காலமாக சொல்லி வருகின்றனர். ஏனெனில் இறைவன் ஒளி வடிவில் நமக்கு காட்சி தருகிறார் என்பது ஐதீகம். ஆக, காலை மாலை என இருவேளைகளும் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் வீட்டில் அமைதி மற்றும் ஐஸ்வர்யம் பெருகும்.
உங்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளை வீட்டின் பூஜை அறையில் தினமும் விளக்கேற்றி சொல்லுங்கள். ஏனெனில் பெண்கள் மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்லுவார்கள். இப்படி அவர்கள் செய்தால் அவர்களின் முகம் பொன்னாக ஜொலிப்பதை நீங்கள் காண்பீர்கள்.
நீங்கள் வீட்டில் சூரிய உதயத்திற்கு முன்பாக விளக்கேற்றி வழிபடுங்கள். ஏனெனில் அப்போதுதான் யோகங்கள் உங்களை தேடி வரும்.
அதுபோல் மாலையில் சூரியன் மறைவதற்கு முன்பாக விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் செல்வம் செழிக்கும்.
சிலரது வீட்டில் நிம்மதி இல்லாமல் எப்போதுமே சண்டைகள் சச்சரவுகள் இருக்கும். எனவே, இவற்றை ஒழிக்க அந்த வீட்டில் உள்ளோர் தினமும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
இதையும் படிங்க: Vastu Tips : விளக்கு ஏற்றினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? விளக்கேறுவதற்கான வாஸ்து குறிப்புகள் இங்கே..
அதுபோல் நீங்கள் உங்கள் வீட்டில் தினமும் விளக்கேற்றி வழிபட்டால் சந்தோஷம் பெருகும், வேலை வாய்ப்பு கிடைக்கும், புத்திர பாக்கியம் உண்டாகும்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் முன்னோர்களின் படத்திற்கு விளக்கு ஏற்றும் போது எப்போதுமே வடக்கு திசையில் தான் ஏற்ற வேண்டும். மற்ற சமயங்களில் திசையை மாற்ற வேண்டாம்.
இதையும் படிங்க: Vastu tips: மாலையில் இந்த திசையில் மட்டும் விளக்கு ஏற்றாதிங்க! வாழ்வில் துயரங்கள் சூழும்!
நீங்கள் கோவிலில் எப்படி விலகு ஏற்றுகிறீர்களோ அதே போல தான் வீட்டிலும் சம்மணம் இட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.
சில விசேஷ நாட்களில், வீட்டில் குத்து விளக்கு ஏற்றும் போதும் தரையில் அமர்ந்த நிலையில் தான் ஏற்ற வேண்டும்.
அதுபோல் நீங்கள் பஞ்ச கூட்டு எண்ணெயில் விளக்கு ஏற்றும் போது, உங்களுக்கு தெய்வத்தினாலும் மற்றும் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D