"பரணி தீபம்‌" ஏன்.. எப்போது.? அதன் பலன்கள் மற்றும் முறை இதோ!

By Kalai Selvi  |  First Published Nov 22, 2023, 11:00 AM IST

கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில்‌ ஏற்றப்படும் தீபம் பரணி தீபம்‌ ஆகும்.


கார்த்திகை மாதத்தில்‌ வரும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்று திருவண்ணாமலையில்‌ நடக்கும்‌ திருக்கார்த்திகை தீபத்‌ திருவிழா ஆகும். திருவண்ணாமலை சிவபெருமானை வணங்கக்கூடிய ஸ்தலம்‌ ஆகும். இங்கு கார்த்திகை மாதம் அன்று திருக்கார்த்திகை தீபம்‌ ஏற்றி வழிபடுவது மிகவும்‌ விசேஷம்‌ ஆகும். இந்த தீபத்‌ திருவிழாவானது, திருவண்ணாமலையில்‌ மட்டுமின்றி, எல்லா வீடுகளிலும் விளக்கேற்றி கொண்டாடுவார்கள்‌. அதன்படி, இவ்வாண்டு 26 நவம்பர் 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் கார்த்திக்கை தீபத் திருநாளை முன்னிட்டு, பரணி தீபம்‌, அண்ணாமலையார்‌ தீபம்‌ (மகா தீபம்‌), விஷ்ணு தீபம்‌, நாட்டுக்கார்த்திகை தீபம்‌, தோட்டக் கார்த்திகை தீபம்‌ என 5  நாட்கள்‌ தீபங்கள்‌ ஏற்றப்படும்‌. பொதுவாகவே, முதல்நாளில் பரணி தீபம்‌ ஏற்றப்படும். ஏனெனில், பரணி  காளிக்குரிய நாள் ஆகும். அந்நாளில், காளிதேவியை வழிபடும்‌ நோக்கத்தில்‌ பரணி தீபத்தை ஏற்றுவார்கள். 

Tap to resize

Latest Videos

அதுபோல், அண்ணாமலையார்‌ தீபமானது, கார்த்திகை மாதக்‌ கிருத்திகை நட்சத்திரத்தில், திருவண்ணாமலையின் உச்சியில்‌ விளக்கேற்றப்படும். அதே சமயத்தில், மக்கள் தங்கள் இல்லங்களில் விளக்குகளை ஏற்றுவார்கள்.. இது சிவபெருமானை குறித்து கொண்டாடும்‌ விழா என்பதால், இதை "அண்ணாமலையார்‌ தீபம்‌" என்று அழைக்கப்படுகிறது.

இதையும் படிங்க:  இருளை நீக்கி ஒளி தரும் மாதம் "கார்த்திகை" மாதம் .. வளமான வாழ்க்கையும் தரும்!

பரணி தீபம்‌ என்றால்‌ என்ன?

பரணி தீபமானது, அண்ணாமலையார்‌ கருவறையில்‌ அதிகாலையிலேயே ஏற்றப்படும். அதன் பின்னர்‌ அர்த்த மண்டபத்தில்‌ மேலே சொன்ன அந்த 5  தீபங்கள் ஏற்றப்படும். பரணி தீபம்‌ என்பது, கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில்‌ ஏற்றப்படும் தீபம் "பரணி தீபம்‌" ஆகும். இன்னும் சொல்லப்போனால், சிவனின்‌ ஐந்து அம்சங்களான படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌, மறைத்தல்‌, அருளல்‌ ஆகியவற்றை காட்டும்‌ விதமாக இந்த பரணி தீபம்‌ ஏற்றப்படுகிறது. அதன் பிறகே, திருவண்ணாமலை உச்சியில்‌ மாலை 6 மணிக்கு மகாதீபம்‌ ஏற்றப்படுகிறது.

இதையும் படிங்க:  தொடர்ந்து 12 ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்தால், இந்த பலன்கள் கிடைக்குமாம்..! என்ன தெரியுமா?

"பாவங்களைப்‌ போக்கும்‌" பரணி தீபம்‌:

நாம் ஒவ்வொருவரும் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள்‌ நம்மை விட்டு அகல, திருக்கார்த்திகைக்கு முந்தைய  நாளான பரணி நட்சத்திரம் அன்று இல்லத்தில் விளக்கேற்றி இறைவனை வழிபட வேண்டும். முக்கியமாக இறைவன் சன்னிதியில் விளக்கேற்றி வழிபட மறந்துவிடாதீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பரணி தீபம் ஏற்றும் நேரம்?

நவம்பர் 26ஆம் தேதி தீபத்திருநாளுக்கு முதல் நாள் காலை 4:00 மணிக்கு ஏற்ற வேண்டும். மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் ஏற்றும் எண்ணிக்கை:

தீபம் ஏற்றும் அந்நாளில் உங்கள் வீட்டின் வாசல் பகுதியில் 2 தீபம் மற்றும் பூஜை அறையில் 5 தீபம் ஏற்ற வேண்டும். மேலும் தீபத்தின் ஒளி எல்லா இடத்தில் படும் படி ஏற்ற வேண்டும். அதுபோல் நீங்கள்  விளக்கில் நெய் ஊற்றி ஏற்றினால் மிகவும் சிறப்பு. பஞ்சு திரிகளை பயன்படுத்தலாம். மேலும் பழைய 
விளக்குகாளை சுத்தபடுத்தி ஏற்றலாம். அது தவறில்லை.

தீப பலன்கள்‌:

  • உங்கள் வீட்டின் பூஜையறையில்‌ ஒரு முக தீபம்‌ ஏற்றினால்‌ மத்திம பலன்‌ கிடைக்கும்.
  • இரண்டு முக தீபம்‌ ஏற்றினால்‌ குடும்பம்‌ ஒற்றுமையாக இருக்கும்.
  • மூன்று முக தீபம்‌ ஏற்றினால்‌ புத்திர சுகம்‌ கிடைக்கும்.
  • நான்கு முக தீபம்‌ ஏற்றினால்‌ பசு, பூமி சுகம்‌ கிடைக்கும்.
  • ஐந்து முக தீபம்‌ ஏற்றினால்‌ அளவில்லா செல்வம்‌ பெருகும்‌.
click me!