மக்களே.. திருப்பதி கோவிலுக்கு மார்ச் மாதம் போறீங்களா? அப்படினா கண்டிப்பா இதை படியுங்கள்..!

By vinoth kumar  |  First Published Dec 20, 2023, 3:41 PM IST

உலக பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024ம் ஆண்டில் மார்ச் மாதம் சுவாமி தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கூட்டநெரிசலை குறைக்கும் வகையில் பக்தர்கள் வசதிக்காக இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகிய முறைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார். அந்த வகையில் ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன் மூலம் தினசரி 20,000 டிக்கெட் வீதம் ஆன்லைனில் முன்கூட்டியே வழங்கப்பட்டு வருகிறது.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- வைகுண்ட ஏகாதசி 2023 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள் இதோ..!!

இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஏழுமலையானை வழிபட தேவையான டிக்கெட்டுகள், கட்டண சேவை டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இம்மாதம் 18ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை ஆன்லைனில் வெளியிட உள்ளது. மார்ச் மாதம் ஆர்ஜித சேவைகளுக்காக எலக்ட்ரானிக் குலுக்கல் முறையில் 18ம் தேதி முதல் காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டை எண் மூலம் முன் பதிவு செய்துகொள்ளலாம். அப்படி முன்பதிவு செய்து கொண்டவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவர்களுடைய செல்போனுக்கு குறுந் தகவல் அனுப்பப்படும். அதன் பிறகு சம்மந்தப்பட்ட பக்தர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி அதற்கான டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம். 

இதையும் படிங்க;-  சனி பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம்.. இனி அமோக காலம் தான்...

இதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் & சகஸ்ர தீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகளுக்கு வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். மார்ச் மாதம் ஏழுமலையான் கோயில் தெப்பகுளத்தில் நடைபெறும் தெப்பல் உற்சவத்திற்கான டிக்கெட் வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கும், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைக்கான ஆன்லைன் சேவைக்கு (சேவையில் பங்கேற்காமல் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்) வரும் 21ம் தேதி மதியம் 3 மணிக்கு பதிவு செய்யலாம்.

இதையும் படிங்க;-  கண்டச்சனியால் மகா யோகம்...பொன்னான காலம் ஆரம்பம்..!

மார்ச் மாதம் அங்கப்பிரதசட்ணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன டிக்கெட் 23ம் தேதி மதியம் 3 மணிக்கும், ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கான தரிசனம் மற்றும் தங்குமிடம் ஒதுக்கீடு 23ம் காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.மார்ச் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25ம் தேதி காலை 10 மணிக்கும், ஓய்வறைகள் முன்பதிவு 25ம் தேதி மதியம் 3 மணிக்கும் முன்பதிவு செய்யலாம். அதேபோல் வரும் 27ம் தேதி ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்களாக சேவை செய்வதற்கான ஆன்லைன் பதிவு காலை 11மணிக்கும், வெண்ணெய் உற்பத்தி செய்யும் நவநீத சேவைக்கும் மதியம் 12 மணிக்கும், உண்டியல் காணிக்கை எண்ணும் பரகாமணி சேவைக்கு மாலை 3 மணிக்கும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!