சனி பகவான் கண்டச்சனியாக ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால், சச மகா யோகம் உருவாகிறது.
இன்று (20, டிச) சனி பகவான் மாலை 5.23 மணியளவில், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அங்கு 6.03.26 வரை கும்பராசியில் இருக்கும் அவரால் சிம்ம ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.சிம்ம ராசியில் மகம் நட்சத்திரம் 4 பாதங்களும் காணப்படுகிறது. மேலும் சனி பகவான் கண்டக சனியாக ஏழாம் வீட்டில் பயணம் செய்து, சிம்ம ராசியை பார்க்கிறார். இதனால் சச மகா யோகம் உருவாகும்.
கண்டச்சனி:
ஜாதகத்தில் 7ஆம் இடம் களத்திர ஸ்தானம் ஆகும். இது நம்முடைய வாழ்க்கை துணை, தொழில் கூட்டாளிகளை குறிக்கும் இடம் ஆகும். சனி பகவான் இந்த இடத்தில் பயணம் செய்வதால் கவனமாகவும்,
நிதானமாகவும் இருக்க வேண்டும். மேலும் இதனால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. சனிபகவான் உங்களுக்கு ஒருபோதும் சங்கடத்தை கொடுக்க மாட்டார். அதுபோல் நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கொஞ்சம் கவனமும், நிதானமும் அவசியம்.
சச மகாயோகம்:
இந்த மகாயோகத்தால், உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்தால் கூட விட்டுக்கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.
உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது மிகவும் அவசியம். வாகன பயணத்தின் போது நிதானமாகவும், கவனத்தோடும் செயல்படுவது நல்லது. விஷ பூச்சிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
இது பொன்னான காலம்:
சனி பகவான், கண்டச்சனியாக சஞ்சரிக்கும் காலம் பொன்னான காலம் என்று கூறப்படுகிறது. மேலும் சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் இந்த சச மகாயோகம் உருவாகிறது. இதனால் வெற்றி உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். பண விசயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். தொழில் கூட்டாளிகளை நம்பாதீர்கள்.
இதையும் படிங்க: அடுத்த 2.5 ஆண்டுகள் சனி பகவான் பாடாய் படுத்தப்போகிறார்.. கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்..
ராஜயோக காலம்:
சனியின் இந்த யோகத்தால், உங்களுக்கு திடீர் பண வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வரும் 2024ஆம் ஆண்டில் உங்களின் பொருளாதார நிலை உச்சத்திற்கு செல்ல வாய்ப்பு அதிகம். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். சொத்துக்கள் கிடைக்கும். உங்களுக்குத் திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க செழிப்பான காலம் இது.
இதையும் படிங்க: சனி பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம்.. இனி அமோக காலம் தான்...
உயர் பதவி:
சனியின் ஆசீர்வாதத்தால் திருமணத்தடை நீங்கும். வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. நீங்கள் விட்டுக் கொடுத்து சென்றால் வெற்றி உங்களைத் தேடி வரும் கடல் வழி தொழில் செய்பவர்களுக்கு சனியால் நன்மையே கிடைக்கும். வேலை இடமாற்றம் கிடைக்கும். மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு மகா யோகம் உண்டாகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சனியின் பார்வை:
சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பயணம் செய்யும் போது பாதிப்புகள் இருக்காது, யோகங்கள் மட்டுமே அதிகரிக்கும். எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்வது நல்லது. இதனால் ஏமாற்றங்கள் வராது. சனியின் பார்வை சிம்ம ராசியின் மீது விழுவதால், அற்புதங்கள் பல நிகழப்போகிறது. அதுபோல் ஒன்பதாம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். கடன் வாங்கி வீடு வாங்க வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். கணவன் மனைவி உறவில் கவனம் தேவை. வரும் 2024ஆம் ஆண்டில் புது வாகனம் வாங்க வாய்ப்பு அதிகம்...