
கணவன் மனைவிக்கிடையே இருக்கும் பிரச்சனையை தீர்த்து வைக்கும் அர்த்தநாதீஸ்வரர் திருக்கோயில் . திருமணத்தடை நீங்கவும், நாக தோஷம் தீரவும் கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்து தீர்த்து வைக்கும் தெய்வங்கள் அர்த்தநாரீஸ்வரர் கோயில் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற கோயிலாகும். இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில், சிவன் மற்றும் பார்வதியின் ஒன்றிணைந்த வடிவமான அர்த்தநாரீசுவரருக்காக அறியப்படுகிறது. செங்கோடு மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோயில் உருவாகியுள்ளது.
மரகத லிங்கத்தின் வரலாறு
பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வழிபட்டு விட்டு, அவரது அருகில் இருக்கும் உமாதேவியை வழிபடாமல் விட்டு விடுவார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்துச் சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர், எனச் சாபமிட்டார்.
இதையறிந்த சிவன், நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். பார்வதி தேவி இடப்பாகம் பெறுவதற்கு இந்த மலையில் தான் வந்து தவம் புரிந்து கேதார கௌரி விரதம் இருந்து இடப்பாகம் பெற்றார். அப்படி சிவனை நினைத்து தவம் செய்யும் போது சிவபெருமான் லிங்க வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தார் பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார். அர்த்தநாரீஸ்வர மூலவருக்கு முன்னால் மரகத லிங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த லிங்கத்தின் அருமை அறிந்த பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்தே வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார். தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியை பெற்றார். பின் அந்த லிங்கத்தை அங்கேயே நிறுவினார். பின் அந்த லிங்கத்தின் சக்தியை எடுத்துக் கூறி அதை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயமாவதற்குள் எடுத்து பேழையில் வைத்து விடவேண்டும் என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார். மற்ற நேரத்தில் சாதாரணமான லிங்கத்தை வைத்து வழிபடுங்கள் என்று கட்டளையிட்டார்.
விழாக்கள்:
தினசரி பூஜைகள் பக்தியுடன் நடத்தப்படுகின்றன. சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன. கோயில் தனது கீரிவலம் வழக்கத்திற்கும் பிரபலமாக உள்ளது.
ஆணும் பெண்ணும் சமம் என்னும் தத்துவம்:
நாரீ என்றால் பெண் எனவும், ஈஸ்வரன் என்றால் சிவன் பொருள்படும் அர்த்த+நாரீ+ஈஸ்வரர் இறைவன் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் இத்தலத்தில் பெண்ணாகவும், ஆணாகவும் இரண்டற கலந்து அம்மையப்பன் என்று அழைக்கப்படும் அர்த்தநாரீஸ்வரராக அதிசியமான வடிவுடன் பக்தர்களுக்கு காட்சியாளிக்கிறார். இறைவன் ஆணா அல்லது பெண்ணா என்ற கேள்வி எழுப்பி ஆண் என்றால் ஆண், பெண் என்றால் பெண் என்று புரட்சிகரமாகப் பதில் தருகிற உமையொருபனாக மங்கை பாங்கனாக மாதிருக்கும் பெருமானுக்கு முக உருவ வழிபாடு இல்லை. பாதியானாக காட்சி தருகினற சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்கிற உண்மையை உலகுக்கு உணர்த்திய உன்னத திருத்தலம் ஆகும். ஆணும் பெண்ணும் இருவரும் சமம் தான் என்பது எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயில் மக்களுடைய மிகவும் புகழ்பெற்ற கோயிலாக இருந்து வருகிறது. இந்த வகையிலும் ஆணும் பெரியவனாக இல்லை இந்த வகையில் பெண்ணும் பெரியவளாக இருந்தது இருவரும் சமம் என்பதே இந்த கோயிலின் தத்துவமாக கருதப்படுகிறது.