பந்தள அரண்மனையிலிருந்து பொன்னம்பல மேடு வரை – ஐயப்பனின் திருவாபரண பெட்டி ரகசியங்கள்!

Published : Jan 14, 2026, 10:25 PM IST
Sabarimala Thiruvabaranam List Inside Ayyapppa Jewel Box

சுருக்கம்

Sabarimala Thiruvabaranam List Inside Ayyapppa Jewel Box : சபரிமலை ஐயப்பனுக்கு மகர சங்கராந்தி அன்று அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் மிகவும் புனிதமானவை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.

ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி நாளன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் பொன்னம்பலமேடு மலை உச்சியில் 3 முறை தெரியும் ஜோதி தான் மகரஜோதி. இந்த ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து செல்கின்றனர். சிவனுக்கும் விஷ்ணுவின் அவதாரமான மோகினிக்கும் பிறந்தவர் தான் ஐயப்பன். இவருக்கு மணிகண்டன் என்ற பெயரும் உண்டு. உலக நலனுக்காக தவம் இருப்பதாகவும், மகர சங்கராந்தி நாளில் ஒருமுறை கண்களைத் திறந்து அருள் புரிவதாகவும் உறுதியளித்தார். அப்போது, பொன்னம்பலமேட்டில் ஒரு நட்சத்திரமாக தோன்றுவதாகவும், திருவாபரணங்கள் அணிந்து காட்சியளிப்பதாகவும் கூறினார்.

திருவாபரணப் பெட்டி:

பந்தள அரண்மனையின் ராஜா ஐயப்பனை வளர்த்து வந்தார். அவர் நான் ராஜாவாக இருக்க எனக்கு மனம் இல்லை நான் மலை மேல் சென்று தவம் புரிய போறதாக கூறிவிட்டு சபரிமலையில் சென்று தவம் புரிவதாக அமர்ந்து விட்டார். பிறகு வளர்த்த பாசத்தால் பந்தல அரண்மனை ராஜா ஐயப்பனை வருடத்திற்கு ஒருமுறை பார்ப்பாராம் பார்ப்போம் பொது அரண்மனையில் இருந்து தங்க ஆபரணங்களை எடுத்து வந்து ஐயப்பனுக்கு அணிவித்து வழிபட்டு செல்வார் .

இதனை காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர் கேரளா மக்கள். ஆகையால் பந்தல அரண்மனையில் இருந்து வரும் வைரம் பதித்த கிரீடம், தங்க நகைகள் அடங்கிய திருவாபரணப் பெட்டிகள், மகரஜோதி நாளில் சபரிமலைக்கு கொண்டு வரப்படுகின்றன. இவை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, ஜோதி தரிசனத்தின் போது மகர ஜோதிக்கு இணையாகக் கருதப்படுகிறது. இவருக்கு ஆபரணங்கள் அணிந்து தீபம் காட்டும் போது பொன்னம்பலம் மேட்டில் மகர ஜோதி தெரியும் என்றும் மூன்று முறை ஜோதி விட்டு விட்டு எரியும் என்றும் கூறப்படுகிறது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பில்லி, சூனியம், தோஷங்களை விரட்டும் மதுரை ராக்காயி அம்மன் மகிமை!
கோயில் திருவிழாக்களில் கொடியேற்றுவது ஏன்? – மறைந்திருக்கும் ஆன்மீக ரகசியங்கள்