
ராக்காயி அம்மன் கோயில்:
பழமுதிர்ச்சோலைக்கும் மேலே செங்குத்தான மலை உச்சியில் அழகிய வன காடுகளுக்கு நடுவில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள் ராக்காயி அம்மன். ராக்காச்சி அம்மன் என்றும் சொல்வார்கள். முதலில் ராக்காயி கோயிலில் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தத்தில் நீராடிவிட்டு தான் ராக்காச்சி அம்மனை தரிசிக்க வேண்டும்.
ராக்காச்சி அம்மனின் எல்லையை மிதிக்கவே கிட்டத்தட்ட 100 படிகள் கடந்து தான் செல்ல வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ராக்காயி கோயிலில் நூபுர கங்கை தீர்த்தம் எங்கிருந்து வருகிறது எப்படி வருகிறது என்பது புரியாத புதிராகவே இருக்கும். ஆனால், இயற்கை மூலிகை நிறைந்த நூபுர கங்கை தான் ராக்காயி கோயிலில் மட்டுமின்றி அழகர் கோயிலிலும் குடிநீராகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நூபுர கங்கை தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தீர்த்தம் நோய்கள் தீர்க்கும் சக்திக் கொண்டதால், இத்தீர்த்தம் தெற்கு நோக்கி பாயும்போது 'சிலம்பாறு' என்று அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தை அனைவரும் பாட்டில்களில் பிடித்து வீட்டிற்கு கொண்டு போகும் பழக்கமும் உண்டு. வீடு முழுவதும் தெளித்தால் சுற்றமும் சூழும் நமக்கு நன்மையை தரும் கெட்ட சக்திகளானத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
வேண்டுதல்
ராகு, கேது தோஷங்கள் நீங்கவும், மனநலம் மற்றும் தோல் நோய்களுக்கும் இந்த அம்மனை வழிபடுவது பலனளிக்கும் என நம்பப்படுகிறது. ராகு தோஷம் உள்ளவர்கள், ராக்காயி அம்மன் வீற்றிருக்கும் மலைக்குச் சென்று நூபுர கங்கை தீர்த்தத்தில் நீராடி, அம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை சாற்றி வழிபடுவது மிகச்சிறந்த பலனைத் தரும் என்று கூறப்படுகிறது.