
Sabarimala Ayyappan Makara Jyothi Darishanam : சபரிமலையில் கார்த்தி மாதம் முதல் தை மாதம் வரை மிகவும் விசேஷமாக இருந்து வரும் இந்த விசேஷத்துக்கு முக்கிய காரணம் மகரஜோதி தான். மகரஜோதி மூலம் ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு மூன்று முறை கண் முன் தோன்றி காட்சியளிப்பார். அந்தக் கண்குள்ளாக் காட்சியை பார்ப்பதற்கு மனதில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் கண்களில் கண்ணீரும் நெகிழ்ந்தபடி பக்தர்கள் மனதில் சுவாமியே சரணம் ஐயப்பா என்னும் வார்த்தையுடன் மலையை நோக்கியே பார்க்கப்பட்டிருக்கும். ஒரு நிமிடம் கழித்து ஒவ்வொரு ஜோதியும் நமக்கு தெரியும் மூன்று முறை ஜோதி தரிசனம் நமக்கு கிடைக்கும்.
பந்தள அரண்மனையிலிருந்து வந்த திருவாபரண பெட்டி:
பகல் 02.45 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு, 03.08 மணிக்கு மகர சங்கராந்தி பூஜைகள் நடைபெற்றன. தந்திரி கண்டரு மகேஷ் மோகன் மற்றும் மேல்சாந்தி இ.டி.பிரசாத் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் இந்த பூஜைகள் நடைபெற்றன. பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணப் பெட்டி மாலை 6.15 மணியளவில் சன்னிதானத்தை அடைந்தது. 18 படிகள் ஏறி கோயில் கருவறைக்கு 6. 40 அட் பெட்டி கோயில் கருவறைக்குள் நுழைந்தது.
மகரஜோதி:
மகரஜோதி ஜனவரி 14-ஆம் தேதியான இன்று மாலை 6.40 மணியளவில் திருபாரண பெட்டி 18 படிகள் ஏறி ஐயப்பசாமியை கருவறைக்குள் சென்றது. அப்படி கருவறைக்குள் சென்றதும் கருவறையின் கதவு மூடப்பட்டதது. ஆபரணங்களை அனைத்தும் சிறு பாலகனாக அமைந்திருக்கும் ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட உடன் கதவுகள் திறக்க 6. 42 அளவில் முதல் ஜோதியானது காட்சியளிக்கப்பட்டது. அருள் ஜோதியாக ஐயப்ப சுவாமி காட்சியளித்தார் சாமியே சரணம் ஐயப்பா என்னும் கோஷத்துடன் மனதார வேண்டிக் கொண்டனர் காட்சியை கண்டு மகிழ்ந்தனர். ஜோதி மறைய ஒரு நொடி கழித்து 6:43 மணியளவில் இரண்டாவது ஜோதி காட்சியளித்தது.
இரண்டாவது ஜோதியும் மறைய 6.43 அளவில் மூன்றாவது ஜோதி காட்சியளிக்கப்பட்டது. சாமியே சரணம் ஐயப்பா ஹரிஹரசுதனே சரணம் ஐயப்பா என்ற கோஷத்துடன் பக்தர்கள் பக்தி உணர்வில் கண்களில் நீர் வழிந்தபடியே கண்குள்ள காட்சியை கண்ணாரக் கண்டு பகிர்ந்தனர்ஐயப்ப சுவாமியின் அலங்காரத்திற்கு பிறகு அவரின் உருவத்தை காண்பிக்கப்பட்டது பக்தர்கள் மனதில் சுவாமியே சரணம் ஐயப்பா என்னும் வார்த்தையுடன் ஐயப்ப சாமி அரசன் மகனாக அமர்ந்திருக்கும் காட்சியை கண்டு மனம் நெகிழ்ந்தனர்.
தன் மனதில் உள்ள பிரச்சனைகளையும் குடும்ப வாழ்க்கைக்கு 48 நாட்கள் விரதம் இருந்து மாலை போட்டு வந்த பக்தர்களை அனைவரும் மனதிலும் நீங்காத கவலைகளை மறந்து கண்முன் இருக்கும் அரசன் ஐயப்பனிடம் வேண்டி மனம் உருகி வேண்டிக் கொண்டனர்.