உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராக கருணாகர ரெட்டி ஏற்கெனவே நியமிக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டார்.
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த மூன்று பேரை ஆந்திர அரசு நியமித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராக கருணாகர ரெட்டி ஏற்கெனவே நியமிக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கான பரிசீலனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதிய உறுப்பினர்களுக்கான பட்டியலை ஆந்திர அரசு வெளியிட்டுள்ளது.
undefined
அதில், தமிழகத்தின் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், சென்னையைச் சேர்ந்த டாக்டர் எஸ்.சங்கர், கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் உள்பட 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் அமித்ஷா தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து 3வது முறையாக அறங்காவலர் குழு உறுப்பினராகவும், நிர்மலா சீதாராமன் தரப்பில் டாக்டர் சங்கர் இரண்டாவது முறையாக தொடர்ந்து பதவியேற்க உள்ளனர். திருப்பூர் பாலசுப்ரமணியம் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலதிபரான பாலசுப்பிரமணியம் முதல்வர் ஸ்டாலினின் குடும்ப நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.