
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டில்ஸ் என்னும் பகுதிக்கு அருகில் உள்ள எருமை வெட்டி பாளையம் அங்கு அமைந்துள்ள மிகப் பழமையான மற்றும் தொன்மையான சிவன் கோயில். சிவனின் பெயர் வரமுக்தீஸ்வரர் கோவில் ஆகும். நம் கேட்கும் மரங்களை அள்ளித் தருபவர் இந்த வரமுத்தீஸ்வரர்.
கோவிலின் அமைப்பு:
இக்கோயிலில் வரமுக்தீஸ்வரர், கோவிலில் உள்ளே நுழையும் போதே காமாட்சியம்மன் சன்னதி உள்ளது. விநாயகர், பாலமுருகன், சண்டிகேஸ்வரர், சிம்மம், நந்தி, கால பைரவர் சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. வரவுத்தீஸ்வரர் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலின் வெளிப்புறத்தில் அழகிய கிராமம் ஒன்று உள்ளது பச்சை பசேர் என்று புல்வெளியும் ஆடுகள் மாடுகள் கோழிகள் இன்று நடமாடிக்கொண்டு மிகவும் இயற்கை தத்துவ வாய்ந்ததாக இருந்தது. கோயில் மிகவும் அமைதியான சூழலும் அற்புதமான கோயிலும் பார்ப்பதற்கே மனம் நெகிழ்ச்சியாக இருந்தது. திருமண மண்டபம் ஒன்று வலது புறத்தில் அமைந்துள்ளது அங்கு திருமணங்கள் காது குத்தும் விழா போன்ற விழாக்கள், அறுபதாவது கல்யாணம் திருவிழா நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மூலவரின் சிறப்பு:
வரமுதக்தீஸ்வரர் கோயிலின் மூலவராக இருக்கும் சிவன் லிங்கம் உருவத்தில் உள்ளார். எதுவாக லிங்கம் அமைப்பில் இருக்கும் அந்த சிலை கற்களால் வடிவமைக்கப்பட்டதாக இருக்கும் இல்லையென்றால் செங்கல் மண்ணினால் உருவாக்கப்பட்டதாக இருக்கும் ஆனால் வரமுத்தீஸ்வரரோ செம்மண் கலந்த கருங்கல்லால் உருவாக்கப்பட்டு அமைந்திருப்பதாக கூறப்படுகிறது மிகச்சிறப்புடையவர் என்றும் இந்த வகையான கற்களால் எங்குமே லிங்கம் அமைத்திருக்காதது என்றும் வரலாற்றில் கூறப்படுகிறது. மிகத் தொன்மையான கோயில்களில் இந்த கோயிலும் இடம் பெற்றிருப்பது ஒரு வரலாற்றை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
ஆடும் தீபம்:
வர முக்தீஸ்வரர் லிங்கமாக அருள் பாலிக்கிறார் இவரது பின்புறத்தில் ஒரு விளக்கு உள்ளது அந்த விளக்கு ஏற்றப்பட்ட தீபம் மட்டும் எப்போதும் ஆடிக்கொண்டே இருக்குமாம் அது ஏனென்றால் அந்த சிவனே வந்து தாண்டவம் ஆடுகின்றார். ஒரு தீபம் மட்டும் மாறி கொண்டிருக்கும் அற்புதம் இங்க மட்டும் தான் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அந்த ஒரு தீபம் மட்டுமே எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கின்றது ஏனென்றால் சிவனை இந்த கோயிலில் கண் முன்னேதாண்டவம் ஆடுவது போல்உள்ளது. அற்புதமான காட்சியை இங்கு தவிர வேறு எங்கேயும் காண முடியாது.
சிறப்பு விழாக்கள்:
வர முக்தீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி அன்று இரவு முழுவதும் மிகவும் கோலாகலமாக திருவிழாக்கள் நடைபெறும். இரவு முழுவதும் இசை கச்சேரி நடன கச்சேரி போன்ற திருவிழாக்கள் இருப்பது போல் இங்கு மிக சிறப்பாக நடத்தப்படும். தமிழ் புத்தாண்டு அன்று சூரிய கதிர் லிங்கத்தின் மேல் நேரடியாக படும் சிறப்பு இங்குதான் உள்ளது அன்று பார்ப்பதற்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சிவனின் அருளை பெற்று செல்வார்கள்.
வழிபாட்டு பலன்:
வர முக்தீஸ்வரை ஒரு முறை வேண்டிக் கொண்டால் நாம் கேட்ட வரங்களை கொடுப்பார் . மனதார நினைத்து தம் உன்னதால் போற்றி வந்தால் நம்ம நம் உடலில் உள்ள கஷ்டங்களும், மனதில் உள்ள கஷ்டங்களும், பணக்கஷ்டங்களும் நீங்கி நம் அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி வைப்பார். மட்டுமல்லாமல் திருமணம் வர வேண்டி வருபவர்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். திருமணம் தடை இருப்பவர்களுக்கு மற்றும் குடும்ப வாழ்க்கையில் தடை இருப்பவர்களுக்கு ஜாதகத்தை வைத்து வேண்டிக்கொண்டால் சீக்கிரம் திருமணம் நடைபெறும் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கூறப்படுகிறது அங்கு ஜாதகத்தை வைத்து பூஜை செய்வது மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. ஆகையால் வர முக்தீஸ்வர் செல்லும்போது நம் ஜாதகத்துடன் சென்றால் அதை வைத்து நம்மளுக்கு பூஜை செய்து தருவார்கள்.
மற்றொரு சிறப்பு:
இரண்டு நாட்களுக்கு பிறகு வர முக்தீஸ்வரர் கோயிலுக்கு தற்போது கும்பாபிஷேகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது பிப்ரவரி 11ஆம் தேதி அன்று இந்த கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறப் போகிறது. வர முத்தீஸ்வரனின் அருளை பெறுவதற்கு இந்த கோயிலுக்கு சென்று கும்பாபிஷேக கும்ப தண்ணியை பெறுதல் மூலம் நம் நோய் நொடிகள் நீங்கி மன கவலைகளும், குடும்ப கவலைகளும் நீங்கி பெறுவீர்கள். ரொம்ப தண்ணியே பெறுவதற்கு கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் . ஓம் நமசிவாய சிவாய சிவ சிவ சிவாய என்று உச்சரிப்புடன் கோயிலை சென்று நலம் பெற வேண்டும் என்பதை வேண்டிக் கொள்வோம்.