உங்கள் வீட்டில் பணம் கொட்ட வேண்டுமா? மகாலட்சுமி மனங்குளிர தினமும் இதை செய்யுங்க!!!

By Dinesh TGFirst Published Jun 6, 2023, 10:14 AM IST
Highlights

செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டுமென்றால் சில விஷயங்களை மட்டும் தவறாமல் செய்தால் போதும். 

இறை சிந்தனையுடன் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட நம் வீட்டில் நேர்மறை ஆற்றலை நிலைக்க செய்யும். நம்முடைய தினசரி வாழ்வில் நாம் தெரியாமல் செய்யும் சில விஷயங்களை தவிர்த்து முழு கவனத்துடன் கடவுளை நினைத்தால் மகாலட்சுமி ஆசையை பெறலாம். வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுடன் இருந்தாலும், குழந்தைகள் பெண்கள் மனதில் கவலையும், கண்ணில் கண்ணீரும் கொண்டு துக்கத்துடன் இருந்தால் மகாலட்சுமி அந்த வீட்டில் குடியிருக்கமாட்டாள். வீட்டில் மன அமைதி இருக்கவேண்டும். 

செல்வத்தின் கடவுளான மகாலட்சுமியை வழிபட்டால் அவள் மனங்குளிர்ந்து நமக்கு செல்வத்தை வாரி வழங்குவார். 16 வகையான செல்வங்களுக்கு அதிபதியாக மகாலட்சுமி திகழ்கிறார். மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக குடியிருக்க, வீடு பணத்தில் குறைவில்லாமல் செல்வம் பெருக மகாலட்சுமிக்கு பிடித்த விஷயங்களை நாள்தோறும் நாம் செய்ய வேண்டும். அவருக்கு எது விருப்பம், எது பிடிக்காது என்ற விஷயங்களை இங்கு காணலாம். 

மகாலட்சுமியை ஈர்க்க என்ன செய்ய வேண்டும்? 

  1. காலையில் நாம் கண்விழித்ததும் முகம் கழுவி விட்டு வீட்டில் பின்புறத்தில் உள்ள வாசலை திறந்த பின்னர் தான் முன்பக்க வாசலை திறக்க வேண்டும். ஒருவேளை உங்கள் வீட்டில் பின்புறம் வாசல் இல்லை என்றால், முதலில் ஜன்னலை திறந்து வைக்க வேண்டும். பின்னரே வீட்டு பிரதான வாசல் கதவை திறக்க வேண்டும். இப்படி வாசல் கதவை திறக்கும்போது மகாலட்சுமி நம் வீட்டிற்குள் வர வேண்டும் என மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொண்டு "கிரகலட்சுமி கிரகலட்சுமி" என்று 3 முறை உச்சரித்து கதவை திறக்க வேண்டும்.
  2. தினமும் வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். வீட்டின் நிலை வாசலில் இரண்டு விளக்குகளை ஏற்ற வேண்டும். காலையில் குளித்த உடனே வீட்டில் துளசி செடி வைத்திருந்தால் மஞ்சள், குங்குமம் வைத்து அதற்கு தண்ணீர் விட்டு வழிபாடு செய்ய வேண்டும். துளசி மாடத்திலும் விளக்கு ஏற்ற வேண்டும். பூஜை அறையில் நாள்தோறும் காலையில் புதிய மலர்களை வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். வலது பக்கம் இருந்து சுற்றி வருவது போல விளக்கேற்ற வேண்டும். கிழக்கு முகமாக விளக்கு ஏற்றுவது நல்லது. 
  3. காலையில் எப்போதும் முதலில் பால் தான் காய்ச்சி வைக்க வேண்டும். இப்படி முதலில் பால் காய்ச்சி, அதில் கொஞ்சம் சர்க்கரை கலந்து, தெய்வத்திறகு வைத்த பின்னரே வீட்டில் உள்ளவர்கள் அருந்தக் கொடுக்க வேண்டும்.
  4. வெளியே சென்று திரும்பும்போது கை, கால்களை கழுவி சுத்தமான பின்னர் தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும். சனி பகவான் நம் பாத நுனியில் பிடிப்பார் என்ற காரணத்தால் கால், கைகளை எந்த அழுக்கும் இல்லாமல் கழுவ வேண்டும்.
  5. தினமும் மாலையில் வீட்டு வாசல் படியில் விளக்கு ஏற்றிவிட வேண்டும். காலை வைத்த பூவை நீக்கி விடலாம். பெண்கள் மறந்தும் வாசல்படியில் உட்கார்ந்து தலைவார வேண்டாம். மாலை நேரத்தில் வாசல்படியில் உட்காரக் கூடாது.

இதையும் படிங்க: இந்த சின்ன பூஜை பண்ணிங்கன்னா தொழில், வியாபாரம் பல மடங்கு பெருகி பணக்காரன் ஆகிடுவீங்க!!

மனதில் வைத்து கொள்ளுங்கள்!! 

  • வீட்டிலுள்ள குழந்தைகள் இரவில் தூங்கும் முன்பாக கந்தசஷ்டி கவசம் சொல்லி பிரார்த்தனை செய்து நெற்றியில் திருநீறு பூசிவிட்டு தான் உறங்க வேண்டும். 
  • வீட்டில் சமையல் செய்யும்போது சோறோ, பாலோ கருகாமல் கவனமாக இருக்கவேண்டும். விளக்கை வாயால் ஊதி அல்லது கையால் விசிறி எல்லாம் அணைப்பது தவறு.
  • அவசர காலங்களை தவிர்த்து மாலை வேளையில் கடன் வாங்க அல்லது கொடுக்கக் கூடாது. ஊசி, இரும்பு பொருட்களை மறந்து கடன் கொடுக்கவே கூடாது. 

இதையும் படிங்க: வீட்டுல மயிலிறகு வைப்பதால் எத்தனை துன்பங்கள் நீங்கும் தெரியுமா?

click me!