solar eclipse: 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் நிகழும். இந்த கிரகணத்தின் போது சூரியன் மேஷ ராசியில் இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை அதிகரிக்கும்.
சூரிய கிரகணம் 2023: ஜோதிட, அறிவியல் பார்வையில் கிரகணம் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. 2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20ஆம் தேதி வியாழன் அன்று நிகழும். இந்த சூரிய கிரகணம், "கலப்பின சூரிய கிரகணம்" அல்லது "நிங்கலூ சூரிய கிரகணம்" என்று அழைக்கப்படுகிறது.
சூரிய கிரகணம் எப்போது?
undefined
இந்திய நேரப்படி, ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 07:05 மணிக்கு இந்த கிரகணம் தொடங்கும். கிரகணத்தின் ஆரம்பம் 08:07 மணிக்கும், சூரிய கிரகணத்தின் நடுப்பகுதி காலை 09:45 மணிக்கும் இருக்கும். இந்த கிரகணம் மதியம் 12:29 மணிக்கு முடிவடைகிறது. சூரிய கிரகணத்தின் மொத்த கால அளவு 05 மணி 24 நிமிடங்கள் ஆகும். இது ஆஸ்திரேலியா, கிழக்கு மற்றும் தெற்காசியா, பசிபிக் பெருங்கடல், அண்டார்டிகா, இந்தியப் பெருங்கடல் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் தெரியும். இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது.
ஏப்ரல் சூரிய கிரகணம் ஏன் மிகவும் சிறப்பு வாய்ந்தது?
ஜோதிட சாஸ்திரப்படி, இந்த ஏப்ரல் சூரிய கிரகணத்தின் போது, சூரியன் மேஷ ராசியில் அமர்வார். சூரிய கிரகணத்தின் 2 நாட்களுக்குப் பிறகு வியாழனின் ராசியில் மாற்றம் இருக்கும். அதனால் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பல வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. கிரக நட்சத்திரங்களின் மாற்றங்கள், பல ராசி அறிகுறிகளில் அதன் தாக்கம் ஏற்படுத்தும். அதனால் உலக அரசியலிலும் மாற்றங்கள் வரலாம். இந்த கிரகணத்தால் பாதிக்கபடவிருக்கும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். உங்கள் ராசியில் சூரிய கிரகணம் நிகழுவதால், உடல்நல பிரச்சனை, நிதி விவகாரங்கள், தொழில் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கவலை வேண்டாம்... கிரகணம் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, வியாழன் உங்கள் ராசியில் நுழைவதால், பிரச்சினைகள் குறைந்து, வாழ்க்கையில் சமநிலை ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். சூரிய கிரகணத்தின் போது, சூரியன் உங்கள் ராசியிலிருந்து 9ஆவது வீட்டில் இருக்கிறார். வியாழன் கிரகணத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு செல்கிறார். அத்தகைய சூழ்நிலையில், சூரிய கிரகணத்தின் தாக்கம் சிம்ம ராசியிலும் உள்ளது. இதனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். பதவி உயர்வுக்கு நேரம் சாதகமாக இல்லை. இந்த நேரத்தில், உங்கள் முக்கிய முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும்.
கன்னி
ஏப்ரல் 20-ம் தேதி கன்னி ராசியிலிருந்து எட்டாவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. அதனால் தான் சூரிய கிரகணத்தின் தாக்கம் கன்னி ராசிக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த நேரத்தில், நீங்கள் பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வார்த்தைகளைக் கட்டுப்படுத்தி, பணத்தை மிகவும் கவனமாகச் செலவிடுங்கள்.
இதையும் படிங்க: சனி பெயர்ச்சி.. இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது.. இவர்களின் காட்டில் பண மழை...!
விருச்சிகம்
ஏப்ரல் 20-ம் தேதி உங்கள் ராசியிலிருந்து ஆறாம் வீட்டில் சூரிய கிரகணம் ஏற்படும். இந்த கிரகணத்தின் தாக்கத்தால் உங்கள் எதிரிகள் உங்களை தொந்தரவு செய்யலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நிதி பிரச்சனைகளும் அதிகரிக்கலாம்.
மகரம்
சூரிய கிரகணம் மகர ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை அதிகரிக்கும். உங்கள் ராசியிலிருந்து நான்காவது வீட்டில் சூரிய கிரகணம் ஏற்படும். இதனால் தேவையற்ற செலவுகள் அதிகரித்து, மகிழ்ச்சி குறைகிறது. பணியிடத்திலும் பாதகமான சூழ்நிலைகள் இருக்கும். ஏதேனும் நோய் இருந்தால், இந்த நேரத்தில் நோய் அதிக சிரமத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: நல்ல தர்பூசணியை வாங்குவது எப்படி? இந்த 6 வழிகள் இருக்கு..! 1 தர்பூசணிக்குள் ஓராயிரம் நன்மைகள்!!