பாவங்களிலிருந்து விடுபட நீங்கள் சொல்ல வேண்டிய சக்திவாய்ந்த சிவ மந்திரங்கள்!

By Dinesh TGFirst Published Oct 10, 2022, 12:56 PM IST
Highlights

சிவபெருமான் பிரபஞ்சத்தையே உருவாக்கியவர். இவர் தான் இரக்கத்தின் சின்னமாக விளங்குகிறார். படைத்தல், காத்தல், அழித்தல் என்பதில் அழித்தல் தொழிலை ஏற்று இருப்பவர், சிவபெருமான்.
 

சிவபெருமான் பிரபஞ்சத்தையே உருவாக்கியவர். இவர் தான் இரக்கத்தின் சின்னமாக விளங்குகிறார். படைத்தல், காத்தல், அழித்தல் என்பதில் அழித்தல் தொழிலை ஏற்று இருப்பவர், சிவபெருமான்.

ஆனாலும் இவரை எளிதில் மகிழ்விக்க முடியும். நமது மனதில் ஏற்படும் பயத்தைப் போக்க சிவ மந்திரங்களை படிக்கலாம். அதிலும் சிவ மந்திரத்தை உச்சரிப்பதால் நோய்களில் இருந்து விடுபட முடியும். பயம் மற்றும் கவலைகள் பறந்து விடும்.

சிவபெருமானின் மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் வெற்றியும் கார்ய சித்தியும் வாய்க்கும். ஒரு மனிதரின் ஆழ் மனதில் வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. உடல், மனம், ஆன்மா என்று சகலத்தையும் சுத்தம் செய்யும் தன்மை இந்த மந்திரங்களுக்கு உண்டு. மனித வாழ்வில் அன்றாடம் கடந்து வரும், மன அழுத்தம், சோர்வு, தோல்வி, புறக்கணிப்பு, மற்றும் இதர எதிர்மறை ஆற்றல்கள் ஆகியவற்றைப் போக்க இந்த மத்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு தனி நபர், உடலளவிலும் சரி மனதளவிலும் சரி மிகவும் சோர்வாக விரக்தியாக ஆற்றல் இழந்து இருக்கும்போது சிவ மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். பிறந்த ஜாதகத்தில் உள்ள எதிர்மறை ஆற்றலைப் போக்கும் சக்தி இந்த சிவ மந்திர ஜெபத்திற்கு இருக்கிறது. சிவபெருமானுக்கு பல மந்திரங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு தனி நன்மைகள் உண்டு. 

"ஓம் நமசிவாய"

சிவபெருமானை போற்றுவதில் இந்த மந்திரம் அனைவராலும் அறியப்பட்டது. "நான் சிவபெருமானை வழிபடுகிறேன்" என்பது தான் இதன் பொருள். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைகிறது. உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.

"ஓம் நமோ பகவதே ருத்ராய"

இது ருத்ர மந்திரம். இந்த மத்திரத்தை சிவபெருமானின் ஆசிகளைப் பெற உச்சரிக்க வேண்டும். இது ஒரு விருப்பத்தின் நிறைவேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

"ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்"

இந்து மதத்தில், காயத்திரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும்.அந்த வகையில் சிவகாயத்திரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மன அமைதிக்காகவும் இறைவன் அருளைப் பெறவும் தினமும் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்.

பக்தனின் கனவில் காலணி கேட்கும் தான் தோன்றி மலை பெருமாள்!

கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

நாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.

பெண் குழந்தைகள் பிறந்த நேரம் முக்கியமா, வயதுக்கு வந்த நேரம் முக்கியமா?

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

அழிக்கும் கடவுளாக சிவபெருமான் இருப்பதால் மனிதனின் இறப்பு குறித்த பயத்தைப் போக்கவும் அவரே உரியவர். ஆகவே மகா மிருத்யுஞ்சய் மந்திரம் இந்த பலனை நமக்கு அளிக்கும்.

நமஸ்தே அஸ்து பகவன்
விச்வேஸ்வராய மஹாதேவாய
த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாய
த்ரிகாக்னி காலாய

காலாக்னி ருத்ராய நீலகண்டாய
ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய
ஸதாசிவாய ஸ்ரீமன்
மஹாதேவாய நம

ஜாதக ரீதியாக விபத்து, கண்டம் முதலிய சூழல்களில், இந்த மந்திரத்தை எப்போதும் சொல்லிவருவது, மிகப்பெரும் பலன் தரும். மருத்துவமனையில் ஆபத்தான தருணங்களில் அனுமதிக்கப்பட்டவர்களுக்காக அருகில் அமர்ந்து மானசீகமாக 108 முறை ஜபித்தால், நிச்சயம் ஆரோக்கியம் மேம்படும்.

click me!