spiritual tips அதிர்ஷ்டம் உங்கள் கதவைத் தட்ட வேண்டுமா? பூஜையறையில் இந்த மாற்றங்களை பண்ணுங்க

Published : Apr 22, 2026, 11:26 AM IST
Pooja Room

சுருக்கம்

வீட்டில் செல்வம் சேர வேண்டும், பணப் பிரச்சனைகள் தீர வேண்டும் என பல பூஜைகள், வழிபாடுகள் ஆகியவற்றை நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். இருந்தாலும் எவ்வளவு பணம் வந்தாலும் வீட்டில் தங்காமல் செலவாகிக் கொண்டே இருக்கிறது என்ற கவலை பலருக்கும் உண்டு. இதற்கு நம்முடைய பூஜையறையில் தெரியாமல் நாம் செய்யும் சில சிறிய தவறுகள் தான் காரணம் என சொல்லப்படுகிறது.

பொதுவாக நாம் எல்லோரும் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்று மகாலட்சுமியையும், குபேபரனையும் வழிபடுகிறோம். ஆனால், பல வீடுகளில் எவ்வளவு உழைத்தாலும் பணம் தங்குவதே இல்லை. இதற்கு வாஸ்து குறைபாடோ அல்லது ஜாதகக் கட்டமோ மட்டும் காரணமல்ல; நாம் அன்றாடம் தீபம் ஏற்றும் பூஜையறையில் செய்யும் ஒரு மிகச்சிறிய தவறு தான் நம்மிடம் செல்வம் சேராமல் தடுக்கும் சக்தியாக உள்ளது. வீட்டில் அதிர்ஷ்டமும் செல்வமும் சேரவும், லட்சுமி கடாட்சம் நிலைத்து இருக்கவும் நம்முடைய பூஜையறையில் சில எளிய மாற்றங்களை செய்தாலே போதும். உங்களுடைய பூஜையறையிலும் இந்த மாற்றத்தை செய்து பாருங்கள், வாழ்க்கையில் மாற்றம் வருவதை உணருவீர்கள்.

செல்வம் சேர பூஜையறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் :

1. 'உப்பு' பாத்திரத்தின் மாயாஜாலம் :

மகாலட்சுமியின் அம்சம் நிறைந்துள்ள ஒரு பொருள் 'கல் உப்பு'. ஒரு சிறிய கண்ணாடி அல்லது பீங்கான் கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பி, அதன் நடுவில் ஒரு ஒற்றை எலுமிச்சை பழத்தை வைக்க வேண்டும். வாரம் ஒருமுறை அந்த உப்பை ஓடும் நீரில் கரைத்துவிட்டு, புதிய உப்பை மாற்றினால், வீட்டில் வீண் சண்டைகள் குறையும். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் குறைந்து, அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

2. விளக்குத் திரியில் ஒளிந்துள்ள கோடீஸ்வர யோகம் :

விளக்கேற்றும்போது நாம் பயன்படுத்தும் திரிக்கும் ஒரு குணம் உண்டு. - தாமரைத் தண்டு திரி: முற்பிறவி பாவங்களை நீக்கி, குலதெய்வ அருளைப் பெற்றுத் தரும். - வாழை நார்த் திரி: தெரியாமல் செய்த பிழைகளையும், சாபங்களையும் நீக்கும். - மஞ்சள் பருத்தித் திரி: இது செல்வம் பெருக மிக முக்கியமானது. இது தடைபட்ட காரியங்களை வெற்றியாக்கும்.

3. தீப சுடரின் திசை :

பூஜையறையில் ஏற்றப்படும் தீபத்தின் நிழல், கடவுளின் சிலையிலோ அல்லது படத்தின் மீதோ விழக்கூடாது. பலரும் விளக்கைச் சிலையின் முன்னால் மிக நெருக்கமாக வைப்பார்கள். அப்படி வைக்கும்போது சிலையின் முகம் நிழலில் மறையும். இது அந்த வீட்டில் 'அஞ்ஞானத்தை' (இருளை) உண்டாக்கும். விளக்கைச் சற்று தள்ளி, சிலைக்கு ஒளி பரவும்படி வைப்பதே சரியான முறை.

4. கோமதி சக்கரம் மற்றும் சோழிகளின் ரகசியம் :

உங்கள் வீட்டுப் பூஜையறையில் 11 கோமதி சக்கரங்களும், 11 வெள்ளை நிறச் சோழிகளும் ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். இது குபேரனின் கணக்குப்பிள்ளை போலச் செயல்படும். "பணம் வருகிறது ஆனால் தங்கவில்லை" என்பவர்களுக்கு இது அதிசயத்தை நிகழ்த்தும்.

5. பணப்புழக்கம் அதிகரிக்க :

உங்கள் வீட்டுப் பூஜையறையில் எப்போதும் ஒரு பித்தளைக் கிண்ணத்தில் பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காயுடன் சேர்த்து 5 ஒரு ரூபாய் நாணயங்களை வைத்திருங்கள். இது 'தனாக்கர்ஷண' சக்தியை ஈர்க்கும். இந்த நாணயங்களை ஒருபோதும் செலவு செய்யக்கூடாது. இது உங்கள் வீட்டில் பணப்புழக்கத்தை ஒரு காந்தம் போல ஈர்க்கும்.

6. வாசனை திரவியங்கள் :

தேவதைகளுக்கும், நேர்மறை சக்திகளுக்கும் நறுமணம் மிக்க இடங்கள் பிடிக்கும். பூஜையறையில் எப்போதும் 'வெட்டிவேர்' அல்லது 'சந்தனத் தூள்' கலந்த நீரை ஒரு பாத்திரத்தில் வைத்திருங்கள். இது அந்த அறையின் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதோடு, மன அழுத்தத்தைக் குறைக்கும். உங்கள் பிரார்த்தனையில் கவனத்தை அதிகப்படுத்தும்.

7. மஞ்சள் துணி மாயாஜாலம் :

வெள்ளிக்கிழமை அன்று பூஜையறையில் ஒரு சிறிய மஞ்சள் துணியில் ஒரு துண்டு வசம்பு, மூன்று மிளகு மற்றும் ஒரு சிறிய கல் உப்பு வைத்து முடிச்சாகக் கட்டி, வாசற்படியின் உட்புறம் தொங்கவிடுங்கள். இது நேர்மறை ஆற்றலை 10 மடங்கு அதிகரிக்கும். வீட்டில் மணி அடித்து சாமி கும்பிடும் போது நம் மூளையின் ஆல்பா அலைகளை தூண்டி, நாம் கேட்கும் கோரிக்கையை பிரபஞ்சத்திற்கு மிக வேகமாக எடுத்துச் செல்லும்.

8. சாமி படங்களின் வரிசை முறை :

பூஜையறையில் வலது ஓரத்தில் விநாயகர் இருக்க வேண்டும். மத்தியில் உங்கள் இஷ்ட தெய்வம் இருக்க வேண்டும். இறந்த முன்னோர்களின் படங்களை ஒருபோதும் தெய்வப் படங்களுடன் சேர்த்து வைக்கக்கூடாது. அவர்களைத் தனியாகத் தெற்கு திசையில் வைப்பதே சிறப்பு.

9. புதிய வாய்ப்புகள் தேடி வர :

காலை குளித்து முடித்ததும், பூஜையறையில் ஒரு வெற்றிலையின் மீது சிறிது பச்சை கற்பூரத்தை வைத்து ஏற்றி, அதை வீடு முழுவதும் காண்பித்துவிட்டு, அந்தச் சாம்பலை நெற்றியில் இட்டுக்கொள்ளுங்கள். இது உங்களைச் சுற்றியுள்ள 'ஆராவை' (Aura) சுத்தப்படுத்தி, புதிய வாய்ப்புகளை உங்கள் தேடி வரவழைக்கும்.உங்கள் வீட்டுப் பூஜையறையில் 'கண்ணாடி' ஒன்றை கிழக்கு நோக்கி வைத்திருந்தால், அது அனைத்து வாஸ்து தோஷங்களையும் பிரதிபலித்து வெளியேற்றிவிடும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

siva Vishnu worship ஹரியும் சிவனும் ஒன்றே, எப்படி?...பலரும் அறியாத 5 ஆன்மீக உண்மைகள்
Spiritual: எல்லா பிரச்சினைகளையும் போக்கும் தேங்காய் வழிபாடு.! பணத்தை குவிக்கும் பரிகாரம் இதுதான்.! ஒரே நாளில் உடனே பலன்.!