நெல்லை ஆனித் தேர் திருவிழா இன்று கொடியோற்றத்துடன் தொடக்கம்

By Velmurugan s  |  First Published Jun 24, 2023, 11:52 AM IST

நெல்லை காந்திமதி அம்மன் கோவில் ஆனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்வான தேர் திருவிழா வருகிற 2ம் தேதி நடைபெறுகிறது.


தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன்  திருக்கோவிலும் கருதப்படுகிறது. இத்திருக்கோவிலில் மாதந்தோறும் விழாக்கள் நடந்து வந்தாலும் ஆனிப் பெரும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 

Latest Videos

undefined

இந்த திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைகள் திறக்கப்பட்டு கஜ பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு. கொடிபட்டம் எடுத்துவரப்பட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 

வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு

ஆனிப் பெருந்திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் காலை, மாலை இரு வேலைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதோடு தினமும் மாலையில் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது. 

அரசுப் பேருந்து கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

விழாவின் சிகர நிகழ்வான தேர் திருவிழா வருகிற 2ம் தேதி நடக்கிறது. தேர்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையினர், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றி நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

click me!