சென்னை இஸ்கான் சார்பில் பூரி ஜெகநாதர் ரத யாத்திரை நாளை (ஜூன்.25) நடக்கவிருக்கிறது.
ஒரிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் திருவிழா 9 நாட்கள் நடைபெறும். இத்திருவிழா ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. இது பூரியில் பகவான் ஜெகநாதர் தோன்றிய தினத்தைக் குறிக்கிறது. இதையொட்டி சென்னை பாலவாக்கம் கடற்கரையில் ஜெகநாதர் ரத யாத்திரை நடக்கவிருக்கிறது.
இந்த யாத்திரையை சென்னை இஸ்கான் நடத்துகின்றனர். பாலவாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராயல் என்பீல்டு ஷோரூம் அருகில் ரத யாத்திரை நாளை (ஜூன்.25) மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. அங்கிருந்து நீலாங்கரை வெட்டுவான் கேணி ஈஞ்சம்பாக்கம் வழியாக இசிஆர் சாலையில் உள்ள கோயல் மார்பிள் அருகில் அக்கரையில் யாத்திரை முடிவடையும்.
இந்த விழாவிற்கு இஸ்கான் நிர்வாகக் குழு ஆணையர் பானு சுவாமி தலைமை தாங்குகிறார். இந்நிகழ்ச்சிக்கு கௌரவ விருந்தினர்களாக ஸ்ரீ சுரேஷ் சங்கி (தொழிலதிபர்), சுனில் நாயர் CEO அசோசியேட் முதன்மை திட்ட ஆலோசகர் (ITC திட்டங்கள்) பங்கேற்கின்றனர்.
இந்த யாத்திரை தொடங்கும் முன்பாக பிற்பகல் 2:30 மணிக்கு பானு சுவாமி உரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாத்திரை நிறைவடைந்த பின்னர் கீர்த்தனை மற்றும் பஜனைகள் செய்யப்படும். இறுதியில் இரவு 8 மணி அளவில் பிரசாதம் வழங்கப்படும். மேலும் ரத யாத்திரை செல்லும் வழியெங்கும் கீர்த்தனம் பாடப்படும் கூடவே, பிரசாதமும் வழங்கப்படும்.
இதையும் படிங்க: உங்க வீட்டுல பெட்டி பெட்டியாக பணம் குவியணுமா? இந்த 4 விஷயங்களை தவறாமல் பண்ணி பாருங்க!! நிச்சயம் பலன் உண்டு