வளர்பிறை பஞ்சமி திதி அன்று வராஹி அம்மனுக்கு மலர் வழிபாடு செய்தால் வருமானம் பெருகி கொண்டே போகும்.
அமாவாசை முடிந்த பின்னர் வளர்பிறையில் வரும் பஞ்சமி திதி சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இதுவே வாராஹி அம்மனுக்கு வழிபட ஏற்ற நாள். ஆஷாடா நவராத்திரியுடன் இணைந்து வெள்ளிக்கிழமையில் பஞ்சமி திதி வந்துள்ளதால் கூடுதல் சிறப்பு. வராஹி அம்மன் வழிபாட்டை நாளை (ஜூன்.23) மாலை 6:30 மணிக்கு பின்னர் நம் வீட்டு பூஜையறையில் செய்யலாம். இன்று (ஜூன்.22) வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு பஞ்சமி திதி தொடங்கும். நாளை 23ஆம் தேதி மாலை 7:54 வரைக்கும் பஞ்சமி திதிதான். இன்று மாலையே 6.30க்கு மேல் வராஹி அம்மனை வழிபடலாம். ஆனால் முழு பலனையும் பெற நாளை மாலை நேரத்தில் 6.30 மணிக்கு பின்னர். இரவு 8 மணிக்குள்ளாக வழிபடுவதே சிறந்தது.
செல்வத்தின் கடவுளான மகாலட்சுமிக்கும், சுக்கிர பகவானுக்கும் கூட வெள்ளிக்கிழமை ஏற்றது. இதனுடன் பஞ்சமி திதியும் இருப்பதால் பணக்கஷ்டம் தீர நாளை கண்டிப்பாக வராஹி அம்மனை வழிபடுங்கள்.
undefined
வராஹி அம்மன் வழிபாடு:
நாளை மாலை நேரத்தில் பூஜை அறையில் வராஹி அம்மன் திருவுருவப்படம் இருந்தால் அதற்கு 3 செம்பருத்திப் பூக்கள் சாற்றி வழிபாடு செய்யுங்கள். வழிபாட்டின் போது "வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி, கடன் சுமை குறைந்து, வருமானம் அதிகரிக்க வேண்டும்' என மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் வராஹி அம்மன் திருவுருவப்படம் இல்லையென்றால் லட்சுமி தேவியை வராஹி அம்மனாக நினைத்து செம்பருத்தி பூக்கள் வைத்து வழிபடலாம். இதில் தவறு ஏதும் இல்லை.
உங்களுக்கு செம்பருத்தி பூ கிடைக்கவில்லை என்றால் ஏதேனும் சிவப்பு வண்ண பூக்கள் வைத்து பூஜை செய்யலாம். வராஹி அம்மனுக்கு செம்பருத்தி பூவை சமர்ப்பிப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த வழிபாட்டை செய்வதால் வராஹி அம்மன் மனங்குளிர்ந்து அம்பாள் கொடுப்பாள். வாராஹி அம்மனுக்கு கிழங்கு வகைகள் நைவேத்தியமாக வைக்க வேண்டும். ஒரு டம்ளரில் பானகமும் அம்மனுக்கு படையுங்கள். வாராஹி அம்மனை வணங்கும்போது மனம் மற்றும் உடல் சுத்தம் அவசியம். நாளை மறக்காமல் வராஹி அம்மனுக்கு இந்த வழிபாட்டை செய்துவிடுங்கள். உங்கள் வீட்டில் வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
இதையும் படிங்க: மறந்தும் கூட இந்த 3 பொருட்களை பர்ஸில் வைக்காதீங்க..பண பிரச்சனை தலைவிரித்தாடும்..!!