narasimha Jayanti 2026 இன்று நரசிம்ம ஜெயந்தி 2026: மறந்தும் கூட இந்த 5 விஷயங்களை செய்துடாதீங்க

Published : Apr 30, 2026, 10:15 AM IST
yoga narasimha swamy

சுருக்கம்

நரசிம்ம அவதாரத்தை போற்றும் உன்னத நாள் நரசிம்ம ஜெயந்தி. பயத்தை போக்கி தைரியம், மனவலிமை, ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியவர் நரசிம்மர். பக்தியுடன் அவரை சரணடைந்தால் அவர்களை காக்க உடனே ஓடி வரக் கூடிய கருணை உள்ளம் கொண்டவர் நரசிம்ம பெருமாள். அவரை வழிபடுவர்களுக்கு தொழில் சிறக்கும், கடன் தீரும், பாதுகாப்பு கிடைக்கும், நன்மைகள் அதிகரிக்கும்.

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததும், நொடிப்பொழுதில் நிகழ்ந்ததும் நரசிம்ம அவதாரம் மட்டுமே. நரசிம்ம பெருமாள், சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. 2026-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி வியாழக்கிழமையான இன்று நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. பக்தன் பிரகலாதனின் நம்பிக்கையைக் காக்க, தூணில் இருந்து நரசிம்மர் வெளிப்பட்ட அந்த அற்புத தினத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு விதிமுறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

யாரும் அறியாத நரசிம்ம ரகசியங்கள் :

- நரசிம்ம அவதாரம் என்பது வெறும் சிங்க முகம் கொண்ட கடவுள் மட்டுமல்ல; அது ஒரு தத்துவப் பாடம். மனிதனுக்குள் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்களின் வெளிப்பாடு தான் நரசிம்ம அவதாரம். இவற்றில் தீய குணங்களை அடக்கினால் நமக்குள் இருந்து தெய்வீக தன்மை வெளிப்படும் என்பது தான் நரசிம்மரின் தோற்றமும், அவதாரமும் உணர்த்தும் உண்மைகளாகும். - மின்னல் வேக அவதாரம்: மற்ற அவதாரங்கள் எல்லாம் கருவில் தோன்றி வளர்ந்தவை. ஆனால், நரசிம்மர் மட்டுமே ஒரு நொடியில் தூணிலிருந்து தோன்றியவர். வாழ்வில் தீர்க்க முடியாத சிக்கல்கள் "மின்னல் வேகத்தில்" தீர நரசிம்ம வழிபாடு ஒன்றே வழி. - பானகத்தின் பின்னணி: நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்ட போது மிக உக்கிரமாக இருந்தார். அந்த வெப்பத்தைத் தணித்து, அவரைச் சாந்தப்படுத்தவே வெல்லம், சுக்கு, ஏலக்காய் கலந்த குளிர்ச்சியான பானகம் படைக்கப்படுகிறது. இது நம் உடலில் உள்ள பித்தத்தையும், மனதில் உள்ள கோபத்தையும் கட்டுப்படுத்தும் குறியீடாகும். - வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடு : கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே மிக எளிமையாக நரசிம்மரை வசியம் செய்யலாம். வீட்டில் உள்ள ஏதாவது ஒரு தூண் அல்லது நிலைவாசலுக்கு சந்தனம், குங்குமம் தொட்டு வைத்து, அதற்கு முன் விளக்கேற்றி வைத்து, நம்பிக்கையுடனும், பக்தியுடனும் வழிபட்டால் நரசிம்மரின் அருள் நிச்சயம் கிடைக்கும். - சந்தனக் காப்பு: நரசிம்மரின் கோபத்தைத் தணிக்க அவருக்குப் பிடித்தது குளிர்ச்சி. வீட்டில் சிறிய விக்கிரகம் இருந்தால் சந்தனம் பூசி வழிபடலாம். படம் என்றால், படத்திற்குச் சந்தனப் பொட்டு வைத்து அதன் மேல் ஒரு துளசி இலையை வைக்கலாம். - கடன் தீர்க்கும் நெய் தீபம்: தீராத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இன்று மாலை பிரதோஷ காலத்தில் (மாலை 4:30 - 6:00) ஒன்பது நெய் தீபங்களை ஏற்றி "லட்சுமி நரசிம்ம மங்கள ஸ்தோத்திரம்" வாசித்தால் பண வரவு சீராகும். - பிரத்யேக நிவேதனம்: மோர், பானகம் தவிர, இன்று "மிளகு கலந்த தயிர் சாதம்" நரசிம்மருக்கு படைப்பது ராகு-கேது தோஷங்களை நீக்கும் என்பது பலரும் அறியாத ரகசியம்.

கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் :

நரசிம்மர் வழிபாட்டில் மிகவும் முக்கியமான உறுதியான பக்தியும், பூரண சரணாகதியும் மட்டும். அதனால் இந்த நாளில் 5 விஷயங்களை கண்டிப்பாக தவிர்த்து, நரசிம்மரின் அருளை பெற முயற்சி செய்ய வேண்டும். 1. ஈகோ மற்றும் அதிகார தோரணை: இரண்யகசிபு அழிந்ததே தனது "அகங்காரத்தால்" தான். எனவே, இன்று பணியாளர்களிடமோ அல்லது உங்களை விட எளியவர்களிடமோ அதிகாரத்தைக் காட்டாதீர்கள். 2. பெரிய சத்தங்கள்: வீண் விவாதங்கள், கத்துவது அல்லது சண்டையிடுவதைத் தவிர்க்கவும். அமைதியான சூழலில் மந்திரங்களை ஜபிப்பதே நரசிம்மருக்குப் பிடிக்கும். 3. தாமச உணவுகள்: பூண்டு, வெங்காயம், அசைவம் ஆகியவற்றைத் தவிர்த்து சாத்வீக உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். 4. மாலை உறக்கம்: நரசிம்மர் அவதரித்ததே அந்திப் பொழுதில் தான். எனவே, மாலை 5 மணி முதல் 7 மணி வரை உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். 5. குழந்தைகளைத் துன்புறுத்துதல்: நரசிம்மர் ஒரு குழந்தையின் பக்தியால் தான் (பிரகலாதன்) ஈர்க்கப்பட்டார். இன்று குழந்தைகளை அடிப்பதோ, திட்டுவதோ நரசிம்மரின் கோபத்திற்கு ஆளாக்கும்.

இன்று என்ன செய்யலாம் ?

- இன்று நரசிம்மருக்குரிய நரசிம்ம கவசம் படித்து, அவரை வழிபடுவது சிறப்பு. - நரசிம்ம பெருமாளுக்குரிய 108 போற்றி மந்திரங்களை சொல்லி வழிபடலாம். - அருகில் உள்ள நரசிம்மர் கோவில் அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்று, அங்கு நடக்கும் பூஜைகள், வழிபாடுகளில் கலந்து கொள்ளலாம். - நரசிம்மருக்கு துளசியால் அர்ச்சனை செய்து வழிபடலாம். - வயதானவர்கள், ஏழை குழந்தைகளுக்கு முடிந்த அளவு தானங்களையும், உதவிகளையும் செய்யலாம். - வீட்டில் லட்சுமி நரசிம்மர் பூஜை செய்து வழிபடலாம். இதனால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் வறுமை நீங்கி, சுபிட்சம் ஏற்படும். - நரசிம்ம புராணம் வாசிப்பது மிகவும் நல்லது.

நரசிம்ம ஜெயந்தி பலன்கள் :

2026ம் ஆண்டில் நரசிம்ம ஜெயந்தி வியாழக்கிழமை வருவது கூடுதல் சிறப்பு. குருவின் ஆதிக்கமும், நரசிம்மரின் சக்தியும் இணைவதால், அன்று செய்யப்படும் வழிபாடு தீராத நோய்களைத் தீர்க்கும், எதிரிகள் தொல்லை நீங்கும், முக்கியமாக செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்குத் திருமணத் தடைகள் விலகும். கடன் தொல்லை, தீராத பொருளாதார நெருக்கடிகள், தீயசக்திகளின் பிடியில் இருந்து விடுபட முடியும். ஆபத்துக்கள், நோய்கள், பயம் விலகும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

chitra pournami 2026 சித்ரா பௌர்ணமி 2026: கர்ம வினைகளைத் தீர வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடுகள்
madurai chithirai thiruvizha 2026 வாராரு வாராரு அழகர் வாராரு...கள்ளழகர் எதிர்சேவை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?