மாசி மகம் என்பது சிவன், விஷ்ணு, முருகன் என்ற மூன்று தெய்வங்களையும் வழிபடுவதற்கு உகந்த நாளாகும்
மாசி மகம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, அதாவது இன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனால் பலர் அதிகாலையிலே எழுந்து விரதத்தைத் தொடங்கி இருப்பார்கள். பிப்ரவரி 23ஆம் தேதி மாலை 4.55 மணிக்கு தொடங்கி, பிப்ரவரி 25ஆம் தேதி மாலை 6.51 வரை பௌர்ணமி திதி உள்ளது. அதுபோல் பிப்ரவரி 23ஆம் தேதி இரவு 8.40 மணி முதல் பிப்ரவரி 24ஆம் தேதி இரவு 11.05 மணி வரை மகம் நட்சத்திரம் உள்ளது.
எனவே, இன்று காலை முதல் மாலை வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீர் நிலைகளில் புனித நீராடலாம். இதனால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெருகும் என்பது நம்பிக்கை. அப்படி முடியாதவர்கள் இன்று சிவாலயங்களுக்கு சென்று சிவன் பார்வதியை தரிசிப்பது நல்லது. மாசி மகமானது, ஜாதகத்தில் பித்ரு தோஷம் நீங்கவும், மறைந்த முன்னோர்களுக்கு பித்ரு கடன் கொடுக்கவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. எனவே இந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தால் ஏழு ஜென்ம பாவம் தீரும் என்பது ஐதீகம்.
கேது பகவான் அதிபதியாக வரும் நட்சத்திரம் மகம் நட்சத்திரம். மேலும் சிம்ம ராசியில் குரு பகவானும், சந்திரன் மக நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்யும் போது வரும் பௌர்ணமி நாளே 'மகா மகம்' ஆகும். இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். ஒவ்வொரு ஆண்டும் கும்பகோணத்தில் மாசி மகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: மாசி மகம் பௌர்ணமி பூஜை.. இப்படி வழிபட்டால் செல்வம் அருளி உங்க பரம்பரையை அம்பாள் தழைக்க செய்வாள்..!
மாசி மக நாளில் தான் பார்வதி தேவி தட்சயாணியாக அவதரித்தார், ம்பெருமான் மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தார், பாதாளலோகத்திலிருந்து பூலோகத்தை பெருமாள் வராக அவதாரம் எடுத்தார், காமதகன விழா நடைபெறுவது இந்நாளே, அதுமட்டுமின்றி, நெல்லையப்பர் கோவிலில் திருநாவுக்கரசருக்கு 'அப்பர்த்தெப்பம்' என்ற தெப்ப விழாவை இந்த மாசி மகம் அன்று தான் நடத்துவார்கள்.
இந்த மாசி மாதத்தில் தான் சிவபெருமானுக்கு முருகப்பெருமான் மந்திர உபதேசம் சொல்லி இருப்பார்..எனவே, ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்நாளில் முருக பெருமானை வழிபட்டால் அது நிச்சயமாக நடக்கும் என்பது ஐதீகம். அதுபோல், மாசி மகம் அன்று அன்னதானம் செய்தால், செய்ய பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். மேலும் இந்நாளில், செய்யும் மந்திர உபதேசம் பன்மடங்கு பலனை தரும் என்பது நம்பிக்கை.
இதையும் படிங்க: மாசி மாதம் பௌர்ணமி 2024: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது தெரியுமா..?
இந்நாளில்,புனித நீராடி சிவதரிசனம் செய்தால், ராகுகேது தோஷம் மற்றும், கால சர்ப்ப தோஷம் நீங்கும். அதுபோல் இந்த நாளில் சதுரகிரி, திருவண்ணாமலை, பர்வதமலை, திருநீர்மலை, திருக்கழுகுன்றமலை போன்ற ஸ்தலங்களில் கிரிவலம் சென்றால் வாழ்வில் பல ஏற்றங்கள் கிடைக்கும். உங்களுக்கு தெரியுமா, வடநாட்டில் மாசி மகத்தை 'கும்பமேளா' என்ற விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
மாசி மகம் என்பது சிவன், விஷ்ணு, முருகன் என்ற மூன்று தெய்வங்களையும் வழிபடுவதற்கு உகந்த நாளாகும். எனவே, இந்நாளில், புனித நீராடி, புராணம் படித்து, பிதுர் கடன் அளித்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D