மகா சிவராத்திரி என்பது சிவன் பக்தர்களுக்கு மிகவும் சிறப்பான நாள்.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் சிவன் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக வருவார்கள். இந்நாளில் தான் சிவன் பார்வதிக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது எனவே தான் அந்நாளில் அவர்கள் இருவரும் ஒன்றாக வணங்கப்படுகிறார்கள்.
அதன்படி இந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இம்முறை சர்வார்த்தசித்தி யோகம், சித்தயோகம், சிவயோகம் உருவாகி, 300 ஆண்டுகளுக்கு பிறகு மகாசிவராத்திரி தினத்தில் சிறப்பான அரிய நிகழ்வு நடைபெறுகிறது. இதனால் சில ராசிக்காரர்கள் மிகவும் விசேஷமாக கருதப்படுவார்கள். ஏனெனில், அவர்களுக்கு சிவபெருமானின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அந்த ராசிக்காரர்கள் எவை, அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
மேஷம்: மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மகா சிவராத்திரி மிகவும் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் யாரையாவது விரும்பினால், அவர்களிடம் உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்த இந்த சிவராத்திரி உகந்த நாள். மேலும் இந்நாளில் உங்களது வீடுகளில் சுப நிகழ்ச்சிகளை நடத்தலாம்.
இதையும் படிங்க: Maha Shivaratri 2024 : சிவராத்திரி பற்றி அற்புதமான சில தகவல்கள் இதோ..!!
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மகா சிவராத்திரி மங்களகரமானதாக இருக்கும். மகா சிவராத்திரி அன்று முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொழிய போகிறது. மேலும் அவர்களின் வாழ்க்கையின் போக்கை மாற்றக்கூடிய சில நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இதனுடன் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளும் அவர்களுக்கு திறக்கப்படும். பதிவு உயர்வுக்கான வாய்ப்புகள் ஏற்படும்.
இதையும் படிங்க: சிவராத்திரி 2024 : சிவராத்திரிக்கு முன்பு கனவில் இவற்றில் எது வந்தாலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்!
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு மகாசிவராத்திரி மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும். உங்கள் திருமண வாழ்க்கை நிறைய மகிழ்ச்சியுடன் நிரப்பப்படும். இதனுடன் திருமண வயது எட்டியவர்கள் விரும்பிய வாழ்க்கை துணையை பெறுவார்கள்.
சிம்மம்: இந்த ஆண்டு மகா சிவராத்திரியில் சிம்ம ராசிக்காரர்களுக்கு நற்செய்தி கிடைக்கும். அவர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக நிதி ஆதாயங்கள் மற்றும் சமூகத் துறையில் அவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மகா சிவராத்திரியில் துலாம் ராசிக்காரர்கள் ஏராளமான நிதி பலனை பெகாண்பார்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் செய்யும் எந்த வேலையிலும் வெற்றியை காண்பார்கள். மேலும் இவர்களின் மரியாதை மற்றும் அபிமான கூடும் வாய்ப்பு உள்ளது.
கும்பம்: இந்த ஆண்டு மகா சிவராத்திரி கும்ப ராசிக்கு சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இந்நாளில் கும்ப ராசிக்காரர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், அவர்களின் வேலையில் பதிவு உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களுடான உறவும் வலுவடையும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D