மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2025: தாலி கயிறு மாற்ற நல்ல நேரம் இதுதான்!

Published : May 08, 2025, 09:42 AM ISTUpdated : May 08, 2025, 09:44 AM IST
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2025: தாலி கயிறு மாற்ற நல்ல நேரம் இதுதான்!

சுருக்கம்

இன்று மதுரை மீனாட்சி திருக்கல்யாணம். தீர்க்க சுமங்கலியாக வாழ தாலிக்கயிறு மாற்றும் நேரம் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Madurai Meenakshi Thirukalyanam 2025 : மதுரையில் தற்போது சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் (மே.8) மற்றும் வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளல் (மே.12). மீனாட்சி திருக்கல்யாணம் நாளில் ஒவ்வொரு பெண்களும் தாலிக்கயிறு மாற்றுவது வழக்கம். எனவே இந்நாளுக்கான நல்ல நேரம் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2025 எப்போது?

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் மே 8, 2025 அதாவது இன்று வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. 

தாலி கயிறு மாற்ற நல்ல நேரம்:

இன்று காலை 8.35 மணி முதல் 8.51 மணி வரை மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும். மேலும் இது முகூர்த்த நேரம் என்பதால், இந்த நேரத்தில் பெண்கள் தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம். அதற்கு முன்னதாக பூஜை அறையை அலங்கரித்து விட்டு, தாலி சரட்டில் மாங்கல்யத்தை கோர்த்து தயாராக சுவாமி படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள் மதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று முடிந்த பிறகு, தாலி கயிற்றை கணவர் கையால் அல்லது நீங்களே மதுரை மீனாட்சி நினைத்து கட்டிக் கொள்ளுங்கள்.

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் பார்ப்பதன் பலன்கள்:

மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு அம்மனின் அருள் முழுமையாக கிடைக்கும். திருமணத்தடை இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். மங்கள தோஷம், செய்த பாவங்கள் அனைத்தும் உடனே நீங்கும். வாழ்க்கையில் எப்போதுமே மகிழ்ச்சி, நிம்மதி நிலைத்திருக்கும். வீட்டில் மங்கலம் பெருக ஆரம்பிக்கும்.

வீட்டில் மதுரை மீனாட்சியை வழிபடும் முறை:

உங்களால் மதுரைக்கு சென்று மீனாட்சியின் திருக்கல்யாணத்தை நேரில் சென்று பார்க்க முடியவில்லை என்றால், வீட்டிலேயே டிவி அல்லது ஃபோனில் பார்க்கலாம். அதுபோல வீட்டிலிருக்கும் மீனாட்சி படத்தை பூக்கள், சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்கவும். அம்மனுக்கு நைவேத்தியமாக இனிப்பில் ஏதாவது படைக்கலாம். இல்லையெனில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், குங்குமம், பூ, மஞ்சள் போன்ற மங்களப் பொருட்களை வைத்து படைத்து வழிபடலாம். அதுபோல சுமங்கலி பெண்களுக்கு தாலி சரடு, குங்குமம் தானமாக கொடுக்கலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!