குழந்தைக்கு பொல்லாத கண் திருஷ்டி நீங்க.. இப்படி சுத்தி போடுங்க..!

By Kalai Selvi  |  First Published Aug 27, 2024, 9:10 AM IST

Children's Evil Eye Pariharam : நம் முன்னோர்கள் சொன்னபடி குழந்தையின் மீது இருக்கும் கண் திருஷ்டியை போக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள படி சுற்றி போடுங்கள்.


உங்கள் குழந்தைகள் மீது கண் திருஷ்டி படாமல் இருக்க, நம் முன்னோர்கள் சொன்னபடி அவர்களுக்கு எப்படி திருஷ்டி சுற்றி போட்டால் நல்லது என்பதை குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

குழந்தைகள் மீது கண்திருஷ்டியை போக்க இப்படி திருஷ்டி சுற்றி போடுங்க:

Tap to resize

Latest Videos

undefined

இதற்கு ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து, பிறகு கையை நன்றாக மூடிக்கொள்ளுங்கள். இப்போது குழந்தையை தாயின் மடியில் அமர வைத்து, இடமிருந்து வலமாக மூன்று முறையும், வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி போடுங்கள். குழந்தையுடன் சேர்த்து தாயையும் சுற்றி போடவும். தண்ணீரில் உப்பு கரைவது போல, குழந்தையின் மீது இருக்கும் கண் திருஷ்டியும் கரைந்து காணாமல் போய்விடும்.

இதையும் படிங்க:  வீட்டிலும், வியாபாரத்திலும் ஏற்பட்ட கண் திருஷ்டியால் ஒரே கஷ்டமா? அடியோடு நீங்க பரிகாரம்..

குழந்தை எதையாவது பார்த்து பயந்து குழந்தையின் மீது திருஷ்டி பட்டு விட்டால், குழந்தை சாப்பிடாமல் விழுந்து போய் விடும். இத்தகைய சூழ்நிலையில், பூந்துடைப்ப குச்சியை கொளுத்தி குழந்தைக்கு திருஷ்டி சுத்தி போடுங்கள்.

கண் திருஷ்டிகள் குழந்தை கீழே விழுந்து அடிபட்டால், உடனே செங்கல் அல்லது மண்ணாங்கட்டி எடுத்து, அதை குழந்தையின் தலையை மூன்று முறை சுற்றி பிறகு தூக்கி உடைத்து போடுங்கள். இப்படியும் குழந்தையின் மீது இருக்கும் கண் திருஷ்டியை கழிக்கலாம்.

உங்கள் குழந்தை ஓரளவு சிறிதாக இல்லாமல் கொஞ்சம் பெரியதாக இருந்தால், சாப்பாடு ஊட்டிய பிறகு தட்டில் மிச்சமிருக்கும் சாப்பாட்டில் குழந்தையை கை கழுவ வைத்து, பிறகு அதை வைத்து சுத்தி போடலாம். அதுபோல குழந்தை சாப்பிடுவதற்கு முன் முதல் ஒரு உருண்டையை தட்டில் ஓரமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை காகத்திற்கு போடவும். இதுவும் கண் திருஷ்டிக்கு ஒரு பரிகாரம் ஆகும்.

இதையும் படிங்க:  கண் திருஷ்டியா? இவற்றை நீக்க.. சமையலறையில் இருந்து "இந்த" ஒரு மசாலா போதும்...!!

சில வீடுகளில் கடுகு, மிளகு, உப்பு, குழந்தையின் தலைமுடி, சிறிதளவு தெரு மண் ஆகியவற்றை கையில் எடுத்து, பிறகு குழந்தையை உட்கார வைத்து, இடமிருந்து வலமாகவும், வளம் இருந்து இடமாகவும் குழந்தை சுற்றி பிறகு அதை அடுப்பில் போட்டு எரிப்பார்கள் இதுவும் குழந்தையின் மீது இருக்கும் கண் திருஷ்டிக்கான ஒரு நல்ல பரிகாரம் ஆகும்.

இப்படியாக, குழந்தையின் மீது இருக்கும் கண் திருஷ்டியை நீக்க இப்படி சுற்றி போடலாம்.

இவற்றின் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் :

ஜோதிட சாஸ்திரங்கள் படி, தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி கழிப்பது மிகப்பெரிய பாவம் என்று சொல்லப்படுகிறது. அப்படி செய்தால் அது எதிர்மறை ஆற்றலை கொடுக்கும். அதுமட்டுமின்றி குழந்தையின் ஆயுளும் குறையும். 

அதுபோல, குழந்தையின் நெற்றிலும், கன்னத்திலும் கருப்பு திருஷ்டி பொட்டு வைக்கலாம். இப்படி செய்வது குழந்தையின் மீது இருக்கும் திருஷ்டியை போக்கும். இது பொதுவாக எல்லோரும் செய்வார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!