பித்ருக்கடன் தீர்த்தால் நம் வாழ்வில் எந்த பிரச்னையும் இருக்காது என்பது முன்னோர்கள் வாக்கு. ஒவ்வொரு அமாவாசையன்றும் முன்னோர்கள் வழிபாட்டை செய்தாலும், வருடத்திற்கு 15 நாட்கள் முழுமையாக இந்த வழிபாட்டிற்கு என்றே ஒதுக்கி இருக்கிறார்கள். அதற்கு `மஹாளயபட்சம்’ என்று பெயர்.
பித்ருக்கடன் தீர்த்தால் நம் வாழ்வில் எந்த பிரச்னையும் இருக்காது என்பது முன்னோர்கள் வாக்கு. ஒவ்வொரு அமாவாசையன்றும் முன்னோர்கள் வழிபாட்டை செய்தாலும், வருடத்திற்கு 15 நாட்கள் முழுமையாக இந்த வழிபாட்டிற்கு என்றே ஒதுக்கி இருக்கிறார்கள். அதற்கு `மஹாளயபட்சம்’ என்று பெயர்.
இந்த ஆண்டு மகாளய பட்சம் நேற்று (11.9.22) தொடங்கி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. செப்டம்பர் 25ம் தேதி மகாளய அமாவாசை தினம் ஞாயிற்றுக்கிழமையில் வருகின்றது.
மஹாளயபட்சத்தில் 15 நாட்களும் முன்னோரை வழிபடுவது சிறப்புதான் என்றாலும், முடிந்தவரை பஞ்சமி, அஷ்டமி, தசமி திதிகளில் மகா பரணி நட்சத்திர நாளில் வழிபாடு செய்யலாம்.
மஹாளய சிரார்த்த வழிபாட்டில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அவை:
1ம்நாள் - பிரதமை: பணம் சேரும்
2ம் நாள் - துவிதியை: நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.
3ம் நாள் - திருதியை: நினைத்தது நிறைவேறும்.
4ம் நாள் - சதுர்த்தி: சத்ரு பயம் நீங்கும்.
5ம் நாள் - பஞ்சமி: செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்துகள் பெருகும்.
6ம் நாள் - சஷ்டி: புகழும் கீர்த்தியும் உண்டாகும்.
7ம் நாள் - சப்தமி: பதவி உயர்வுகளில் தடைகள் நீங்கும், உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும், தலைமைப் பதவி தேடி வரும்.
8ம் நாள் - அஷ்டமி: அறிவாற்றல் கிடைக்கும்.
9ம் நாள் - நவமி: திருமணத் தடை நீங்கும். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.
10ம் நாள் - தசமி: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும், விருப்பங்கள் பூர்த்தியாகும்.
11ம் நாள் - ஏகாதசி: படிப்பு, விளையாட்டு மற்றும் கலையில் வளர்ச்சி உண்டாகும்.
12ம் நாள் - துவாதசி: விலை உயர்ந்த ஆடை-ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
13ம் நாள் - திரயோதசி: பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், நல்ல வேலை - தொழில் அமையும்.
14ம் நாள் - சதுர்த்தசி: ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்கும், எதிர்கால தலைமுறைக்கு நன்மை கிடைக்கும்.
15ம் நாள் - மஹாளய அமாவாசை: முன்னோர் ஆசியால் மேற்சொன்ன அனைத்து பலன்களும் சித்திக்கும்.
சரணாகதியின் மகத்துவம் தெரியுமா?
மகாளய பட்ச நாள்களில் கடைப்பிடிக்க வேண்டியவை:
தினமும் குளிக்க வேண்டும். தாம்பத்யம் வைத்துக் கொள்ளக் கூடாது. சைவ உணவை மட்டும் சாப்பிட வேண்டும். உணவில் பூண்டு, வெங்காயம், சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இந்த காலத்தில் நம் முன்னோர்கள் நம்முடன் வசிப்பதால் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். நம் முன்னோர்களை வழிபட்ட பின்னரே, பூஜைகளை செய்ய வேண்டும். தொடர்ந்து மஹாளய அமாவாசை சிறப்புகளை பார்ப்போம்.
தோஷங்களை நிவர்த்தி செய்யும் அத்ரி மலை..
இந்த காலத்தில் பித்ருக்களை வழிபட மறந்தவர்கள் கூட மனம் உருகி வேண்டினால் அவர்களது ஆசி கிடைக்கும். பித்ரு தோஷம் இருப்பவர்கள் தோஷம் தீர தீவிரமாகாமல் இருக்க முன்னோர்களை நினைத்து இயலாதவர்களுக்கு இயன்றதை செய்யலாம். பித்ருக்களின் ஆசி இருந்தாலே குடும்பத்தில் பிரச்சனைகள் படிப்படியாக குறையக்கூடும் என்பதால் இன்றே உங்கள் வழிபாட்டை தொடங்குங்கள்.