இந்து சமயத்தில் விபூதி வைத்து கொள்ளுதல் பண்பாட்டின் தொடர்ச்சி. திருநீறு அல்லது விபூதிக்கு ஐஸ்வர்யம், மகிமை ஆகிய அர்த்தமும் உண்டு. கோயிலுக்கு சென்றால் கடவுளை தரிசித்ததும் பிரசாதமாக விபூதி பெற்றுக்கொள்ளலாம். விபூதி மூலம் கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளும் மரபு சமீபத்திய நூற்றாண்டுகளின் பின்பற்றப்பட்டு வருகிறது.
விபூதியின் மகிமை
விபூதி பூசிக் கொள்கிறவர்கள் தீவினைகளில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பது ஐதீகம். எதிர்மறை ஆற்றல்களில் இருந்து காக்கும் கவசமாக விபூதி கருதப்படுகிறது. அதை அணியும் போது சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
விபூதி பூசும் விதிகள்
- வெள்ளை வண்ண விபூதியை மட்டும் தான் அணிய வேண்டும். விபூதி பூசிக்கொள்ளும் போது முகம் மேல் நோக்கிய நிலையில் இருக்க வேண்டும். அப்போது விபூதி நிலத்தில் சிந்தாமல் நடுவில் உள்ள மூவிரல்களினால் நெற்றியில் விபூதி அணிய வேண்டும்.
- சிலர் ஸ்டைலாக நடந்து கொண்டே விபூதி வைக்கிறார்கள். சிலர் தூங்கும் முன்னர் படுத்தபடியே விபூதி பூசி கொள்கிறார்கள். அது தவறு.
- ஆச்சாரியார், சிவனடியார் ஆகியோரிடம் விபூதி வாங்கும்போது பணிவாக அவர்களை வணங்கி வாங்கி கொள்ளவேண்டும்.
- எப்போதும் வடக்கு கிழக்குமுகமாக நின்றபடியே திருநீறு அணிதல் முக்கியமான விதியாகும்.
- கீழே தலை குனிந்தோ, கைகள் நடுங்கும்போதோ, வாயை திறந்தபடியோ, உரையாடிக் கொண்டோ விபூதி பூசவேக் கூடாது.
- விபூதி வைக்கும் கலயத்தை ஒருபோதும் கவிழ்த்து போடக் கூடாது.
- கோயிலில் திருநீறை பிரசாதமாக பெறும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
- திருநீறை ஒரு காகிதத்தில் இட்டு நெற்றியில் அணிந்து கொள்ள வேண்டும். எப்போதும் இடது கை விரலால் நெற்றியில் விபூசி வைக்கக் கூடாது.
- உங்களுக்கு யாரேனும் திருநீறு தந்தால் மறுக்க கூடாது. வாங்கி கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: ஒரே வாரத்தில் கூர்மையான கண் பார்வை.. துளியோண்டு பசு நெய் போதும்.. இப்படி பண்ணி பாருங்க!
விபூதி பலன்கள்
- விபூதியை புருவ மத்தியில் பூசி கொண்டால் வாழ்வின் ஞானத்தை ஈர்த்து கொண்டு நலம் வாழலாம்.
- தொண்டைக்குழியில் விபூதி அணிந்து கொண்டார் நம் சக்தியை கூடும்.
- நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதியில் விபூதி பூசி கொண்டால் இறை அன்பை பெறலாம்.
- எப்போதும் வீபூதியை மோதிரவிரலால் எடுப்பது நல்லது. மனிதனின் உடலில் உள்ள பவித்ரமான பாகமாக அது கருதப்படுகிறது.
விபூதியை முறையாக நெற்றியில் அணிந்து கொள்வதை பழக்கப்படுத்திக் கொண்டால் பல தெய்வீக பலன்கள் அனுபவிக்க முடியும்.
இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: சிவபெருமானின் மகிமையை பெற எப்போது பூஜை, விரதம் கடைபிடிக்க வேண்டும்? முழுவிவரம்!