
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தர்மதேவனுக்கு அருள் புரிந்த சந்திர சூடேஸ்வரர். கேட்ட வரங்களை கொடுப்பவர் சந்திரசூடேஸ்வரர். நம் பெற்ற தோஷங்களில் இருந்து தீர்த்து வைக்கிறார் சந்திர சூடேஸ்வரர் இக்கோயிலின் சிறப்புகள் பற்றி பார்க்கலாம். அதற்கு முன்னதாக இந்த கோயிலில் வழிபாடு செய்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பது பற்றி பார்க்கலாம்.
பலன்கள்:
சுயம்பு மூர்த்தியாக இருக்கும் சந்திர சூடேஸ்வரரை நம் கண்டால் நம் மீது இருக்கும் பாவங்கள் அனைத்தும் தீர்ந்து தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. அன்னை அம்பிகையை தரிசித்து வந்தால் குழந்தை பாக்கியம் செல்வம் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மூலவர் மற்றும் அம்பிகை அதிசயம்: மூலவர் சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் அருள் பாலிக்கின்றார். கருவறையில் நான்கு கரங்களுடன், நின்ற நிலையில் காட்சி தரும் அம்பிகையின் மூக்கில் மூக்குத்தி போடுவதற்கான துளை அமைந்துள்ளதும், அம்பிகையின் பின்னல் ஜடை ,குஞ்சத்துடன் அமைந்துள்ளதும் அதிசயமான காட்சியாகும். இப்படிப்பட்ட தனித்துவமான வடிவமைப்புள்ள அம்பிகையை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. அம்பிகைக்கு முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.
ஓசூரின் அடையாளம்! மேகங்கள் தவழும் குன்றில் வீற்றிருக்கும் சந்திரசூடேஸ்வரர் கோயில் மகா மகிமை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் அமைந்துள்ளது சந்திரசூடேஸ்வரர் கோவில். மூலவர் லிங்க வடிவில் அருள் பாலிக்கின்றார் அவரது பெயர் சந்திர சூடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை. பச்சையம்மன், பர்வதம்மன் என்ற பெயர்களும் உள்ளன.இத்தலத்து இறைவி மரகதப் பச்சை நிறம் கொண்ட திருமேனி உடையவர். தமிழ்நாட்டில் மலைமீது அமைந்த ஒரு சில சிவாலயங்களில் இந்த சந்திரசூடேஸ்வரர் கோவிலும் ஒன்று. மலை மேல் அமைந்துள்ள இக்கோவிலை அடைய சுமார் 200 படிகள் உள்ளன. வாகனங்கள் செல்ல சாலை வசதியும் உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையானது இத்தலம். ஹொய்சளர்களால் ஆளப்பட்ட இவ்வூர் ஹோசூர் என்ற பெயர் பெற்றது. இம்மாவட்டத்தில் தங்கத்தேர் அமைந்த ஒரே கோவில் இது ஒன்றேயாகும்.