மகாத்மா விதுரர் மகாபாரதக் காலத்தின் புகழ்பெற்ற அறிஞர். அவர் மிகவும் அறிவாளியாக அறியப்பட்டார். அவருடைய எண்ணங்கள் நித்தியமானவை. விதுரரின் கூற்றுப்படி, ஒரு மனிதன் 4 புலன்களின் வெளிப்பாட்டிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
மகாபாரதம் கதை தெரிந்த அனைவருக்கும் விதுரர் குறித்து தெரிந்திருக்கும். மகாராஜா திருதராஷ்டிரரின் சகோதரர்களில் ஒருவரான அவர், மன்னருக்கு அந்தரங்க ஆலோசகராகவும் இருந்தார். கூர்மையான புத்திசாலித்தனம் கொண்டிருந்த விதுரர். அவர் மகாபாரதக் கதையில் நல்லொழுக்கத்துக்கும் நீதி தவறாமல் இருப்பதற்கும் எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டப்பட்டவர். ரிஷி வேதவியாசரின் மகனாக இருந்தபோதிலும், தனது தாய் அடிமையாக இருந்ததால் விதுரருக்கு அரசுரிமை மறுக்கப்பட்டது. எனினும் தன்னுடைய திறமையால் மட்டும் ஹஸ்தினாபூர் மாநிலத்தின் பிரதமரானார். அவருக்கு இந்த பதவியை ஹஸ்தினாபுரத்தின் மன்னன் பாண்டு வழங்கினார். மகாராஜா திருதராஷ்டிரருக்கு ஆலோசகராக இருந்த விதுரர் வெளியிட்ட ஒவ்வொரு கருத்தும், இன்று ஞானமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவருடைய கருத்துப்படி, கெட்ட உணர்வுகள் கொண்ட மனிதன் தனது வாழ்க்கையை இழந்துவிடுவதாக அவர் கூறுகிறார். அந்த வெளிப்பாடுகளிலிருந்து விலகி இருக்கப் பழகாவிட்டால் வாழ்க்கையே அழிந்துவிடும் என்று அவர் எச்சரிக்கிறார். அதன்படி, விதுரர் சொன்ன அந்த 4 வெளிப்பாடுகள் குறித்து பார்க்கலாம்.
சினம்
undefined
விதுர நீதியின் படி, சினம் ஒருவரை பைத்தியமாக்குகிறது. பொங்கி எழும் கோபத்தை அடக்க மறந்தவர் நிதானத்தை இழந்துவிடுகிறார். அதனால் அவர் சரி மற்றும் தவறு என்ன என்பதை தீர்மானிக்கும் திறனையும் இழந்துவிடுகிறார். அதனால் தான் கோபம் உங்கள் ஞானத்துக்கு மிகப்பெரிய எதிரி என்று விதுரர் கூறுகிறார். அதனால் கோபத்தை தவிர்ப்பது நல்லது என்று கூறுகிறார்.
உற்சாகம்
மிகுதியாக உற்சாகம் பெறும் குணநலனும் தீங்கை ஏற்படுத்தும் என்று விதுரர் கூறுகிறார். அப்படிப்பட்ட மனநிலையில் ஒரு தனிமனிதன், அமைதியை இழக்கிறார், அந்நிலை உணர்ச்சிகளில் இருந்து விலகி தவறான முடிவுகளை எடுக்கும் அளவுக்கு தள்ளக்கூடியது என்று அவர் கூறுகிறார். எனவே, மனிதனின் அறிவுத்திறனைக் கெடுப்பதற்கு மிகுதியான உற்சாகமும் காரணமாக அமைகிறது.
புகழ்ச்சி
விதுர நிதியில் ஹ்ரீ என்கிற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பொருள் புகழ்ச்சி என்பதாகும். ஒரு காரியத்தின் மூலம் நமக்கான பெயர் நிலைபெற வேண்டும். வேறு யாரோ புகழ்கிறார்கள் என்று எதையும் செய்துவிடக்கூடாது என்பது விதுரர் கூறும் அறிவுரைகளில் ஒன்று. புகழ்ச்சிக்கு அடிமையானவர் தவறான முடிவுகளை எடுக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுபோலவே, இன்னொருவரை பிடிக்கும் என்பதற்காக அவர்களை அதிகமாகப் புகழ்வதும் தவறுதான்.
தற்புகழ்ச்சி
சுயமாக தன்னைத்தானே புகழ்ந்துகொள்வதும் ஒரு நபரின் மனநிலையை பாதிப்பதாக விதுரர் கூறுகிறார். அதீத தற்புகழ்ச்சி எண்ணங்கள், அந்த நபரை தவறான முடிவுகளை எடுக்க தூண்டும் என்று சொல்கிறார். எனவே, அதுபோன்ற உணர்வுக்கு எப்போதும் இடம் கொடுக்காதீர்கள். அந்த உணர்வு எதிர்காலத்தில் வந்தாலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். நம்முடைய செயல்பாட்டை எப்போதும் அடக்கமாக வைத்துக்கொள்வது நன்மையை பயக்கும் என்பது விதுரரின் கருத்தாக உள்ளது.
விதுர நீதியின் படி, சில வெளிப்பாடுகள் ஒரு மனிதனின் செயல்பாடுகளை முற்றிலுமாக முடக்கிவிடுகின்றன. அதாவது, இந்த வெளிப்பாடுகள் குறிப்பிட்ட நபரை அவர் சார்ந்த இலக்குகளில் இருந்து மடைமாற்றுகிறது. அந்த உணர்வுகளிலிருந்து ஒருவர் தன்னைப் பாதுகாத்துக் கொண்டால், அவர் புத்திசாலி மற்றும் அவரது வாழ்க்கையில் முன்னேற்றம் காண்கிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.