16 செல்வங்கள் என்று எதை சொல்கிறோம் தெரியுமா?

By Dinesh TGFirst Published Sep 28, 2022, 5:27 PM IST
Highlights

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்பது பதினாறு பிள்ளைகளை குறிக்கும் சொல் அல்ல! பதினாறு செல்வங்களை குறிக்கும் சொல் ஆகும். பதினாறு செல்வங்கள் என்றால் உண்மையில் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து அபிராமி அந்தாதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

திருமணம் ஆனவர்கள் அல்லது யாராவது பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும் பொழுது அவர்கள் வாயிலிருந்து ‘பதினாறு செல்வங்களும் பெற்று, பெருவாழ்வு வாழ்க’ என்று கூறுவதை கேட்டிருப்போம். பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர்கள் சிறியோர்களை வாழ்த்துவது தமிழர் மரபு. 

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்பது பதினாறு பிள்ளைகளை குறிக்கும் சொல் அல்ல! பதினாறு செல்வங்களை குறிக்கும் சொல் ஆகும். பதினாறு செல்வங்கள் என்றால் உண்மையில் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து அபிராமி அந்தாதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் 
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் 
கழுபிணியிலாத உடலும் 
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும் 
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் 
தடைகள் வாராத கொடையும் 
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு 
துன்பமில்லாத வாழ்வும் 

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய 
தொண்டரொடு கூட்டு கண்டாய் 
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே 
ஆதிகடவூரின் வாழ்வே! 

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி 
அருள்வாமி! அபிராமியே!

அதாவது, நோயில்லாத உடல், சிறப்பான கல்வி, குறைவில்லாத தானியம், தீமை இன்றி பெறும் செல்வம், அற்புதமான அழகு, அழியாத புகழ், என்றும் இளமை, நுட்பமான அறிவு, குழந்தைச் செல்வம், வலிமையான உடல், நீண்ட ஆயுள், எடுத்தக் காரியத்தில் வெற்றி, சிறப்பு மிக்க பெருமை, நல்ல விதி, துணிவு, சிறப்பான அனுபவம் இந்த 16 செல்வங்களையும் தான் குறிக்கின்றனர்.

Kantha Sasti Kavasam : கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

ஒருவர் புகழினை அடைந்தால் அவர் கல்வியில் குறைந்தவராக இருப்பார். நன்மக்களைப் பெற்றால் நோயுற்றவராக இருப்பார். பெருமை கிடைத்தால் ஆயுள் குறையும். ஆயுள் இருந்தால் பொருள் இருக்காது. இப்படி ஏதாவது ஒரு குறை இருந்தால் நீங்கள் பிறவாமை என்னும் வரத்தை அடைய முடியாமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டி இருக்கும். இந்தப் பதினாறு செல்வங்களையும் அடைந்த பிறகே நீங்கள் மீண்டும் மண்ணுலகில் வராமல் இருப்பீர்கள். 

தமிழகத்தில் காசியை மிஞ்சும் ஒரு கோவில்!!

அதேபோன்று, வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அடைய நினைப்பது என்னவோ இந்த பதினாறு வகையான செல்வங்களையும் தான். இதில் எல்லாவற்றையும் ஒருவர் அடைந்து விட்டால் அவர் முழுமை பெறுகின்றார் அல்லது மீண்டும் மீண்டும் பிறந்து மனிதப் பிறவியை முழுமையாக கழிக்க வேண்டியிருக்கும். இதை கர்மா என்கிறோம். 

அவரவருடைய பாவ, புண்ணிய பலன்களுக்கு ஏற்ப இந்த பதினாறு செல்வங்களையும் ஒரு ஜென்மத்தில் அடைகின்றனர். புண்ணியம் செய்தவர்கள் சிலர் இப்பிறவியிலேயே இந்த 16 விஷயங்களையும் அடைந்து விடுகின்றனர். ஆனால் பாவம் செய்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இந்தப் பதினாறு செல்வங்களையும் அடைந்து பின்னர் மோட்சத்தை முழுமையாக பெறுகின்றனர். மீண்டும் பிறவாமை என்கிற வரத்தை அடைகின்றனர்.

click me!