பெரும்பாலான வீடுகள் மற்றும் கோவில்களின் முற்றத்தில் துளசி செடி மாடத்தை பார்க்க முடியும். கோவில் முற்றங்களில் வளர்க்கும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததா துளசி என்றால், ஆம்.. துளசி செடி தான் இந்துக்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது.
துளசி உருவான கதை..
சிவபெருமான் இந்திரன் மீது கோபப்பட்டதால், அந்த கோபத்தில் பிறந்த ஜலந்தரா என்ற ஒரு அசுரன் சிவனைப் போன்று சக்தி வாய்ந்தவராக இருந்தார். அவர் விஷ்ணுவின் பெரும் பக்தையான வெந்தாவை மணந்தார். பின்னர் அவளது பக்தி காரணமாக ஜலந்தரா யோக சக்திகளை பெற்றார். இப்படியாக ஒவ்வொரு முறையும் போருக்கு ஜலந்தரா செல்லும் போதும், விஷ்ணுவிடம் வெந்தா பிரார்த்தனை செய்தார்.
தேவர்களின் தலைவராக சிவன் இருக்கையில், ஒருமுறை தேவர்களுடன் ஜலந்தரா போர் செய்தான். ஆனால் வெந்தா பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததால், ஜலந்தராவை தோற்கடிக்க முடியாது என்று கடவுள்கள் அறிந்திருந்தனர். அதனால், விஷ்ணு ஜலந்தராரின் உருவில் வெந்தாவிடம் சென்று, உன் தொழுகைகளை நிறுத்து, நான் சிவனை தோற்கடித்து விட்டேன். இப்போது உலகத்தில் என்னைப் போன்று சக்தி வாய்ந்தவர் இல்லை என்று சொல்ல, ஏதோ தவறு இருப்பதாக சந்தேகத்துடனே பிரார்த்தனையை நிறுத்திவிட்டு, எழுந்தாள்.
Mouna viratham : மௌன விரதம் முக்கியத்துவம் என்ன..
அப்போது சிவன் ஜலந்தராவை கொன்று விட, இதை வெந்தா உணர்ந்து, விஷ்ணு தன்னை ஏமாற்றிவிட்டார் என்று அறிந்து கொண்டாள். இதனால் கோபடைந்த வெந்தா நீங்க எனது கணவரையும் சேர்த்து காப்பாற்றி இருக்க வேண்டும், நீங்கள் அப்போது கல் போன்று நின்று விட்டீர்கள், நீங்களும் செய்த பாவங்களுக்கு கல்லில் சிக்க வைக்கப்படுவீர்கள் என விஷ்ணுவை சபித்துவிட்டு வெந்தா இறந்து போனாள். இதன் காரணமாய் தான் சாலிகிராமத்தில் விஷ்ணு சிக்கிக் கொண்டு, துளசி ஆலை என்ற பெயரில் துளசியின் இலைகள் வடிவத்தில் மறுபடியும் பிறந்தார். இதனால் தான் வீடுகள்ல் துளசி வைத்து வழிபட்டால் விஷ்ணுவின் அரு கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதோடு துளசி தளத்தில் 33 கோடி தேவர்கள், பன்னிரு சூரியர்கள், அஷ்ட வசுக்கள், அஸ்வினி தேவர்களும் வசித்து வருவதாகவும், துளசியின் நுனிப்பகுதியில் பிரம்மனும், நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரீ, பார்வதி போன்றோரும் வசித்து வருகின்றனர்.
நவக்கிரக வழிபாட்டிற்கு நடுவில் நமசிவாயத்தை மறக்காதீர்கள்!
அதோடு துளசியை வளர்த்து வழிபடுபவதால் புகழ், செல்வம், ஆயுள் பலம், குழந்தைப்பேறு உண்டாகும். பிரம்மஹத்தி தோஷம் விலக துளசி காஷ்டம் என்ற மணிமாலையைக் கழுத்தில் அணியலாம். எந்த இடத்தில் துளசிச் செடி இருக்கிறதோ அங்கே அகால மரணம் ஏற்படாது. துளசி ராமாயணத்தில் கூட துளசியை பூஜை செய்து வருவதன் பலனாகவே சீதாதேவி ராமபிரானைக் கணவராக அடைந்ததாக கூறுகிறது. மேலும் துளசி செடி மருத்துவ குணங்கள் கொண்டது. இப்படிப்பட்ட அற்புதச் செடியை, அதன் பலனை மக்கள் அனைவரும், ஆழ்மாக ஆராய்ந்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, ஒரு வழிபாட்டு சம்பிரதாயமாகவே வீடுகளில் துளசி செடி வளர்ப்பது பின்பற்றப்படுகிறது.