பொங்கல் தொடர் விடுமுறை மற்றும் சனிப்பெயர்ச்சி முடிந்து 4-வது சனிக்கிழமையை ஒட்டி இன்று திருநாளாறில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள தர்ப்பணேஸ்வரர் ஆலயத்தில் சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். உலக பிரசித்தி பெற்ற இந்த சனி கோயிலில் சனிக்கிழமை தோறும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் வருகின்றனார்.
அந்த வகையில் பொங்கல் தொடர் விடுமுறை மற்றும் சனிப்பெயர்ச்சி முடிந்து 4-வது சனிக்கிழமையை ஒட்டி இன்று திருநாளாறில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலை முதலே திரளான பக்தர்கள் சனி பகவான் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னை, திருச்சி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று சனி பகவான் வெள்ளி கவச வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
வெற்றிலையை 'இப்படி' பத்திரமாக வையுங்கள்.. பணத்திற்கு ஒருபோதும் பஞ்சம் வராது..!
இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா கடந்த டிசம்பர் 20-ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார். சனி பெயர்ச்சி இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை நடந்தாலும், சனி பெயர்ச்சி நடந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் சனி பகவானை வணங்கினால் அதன் பலனை பெற முடியும் என்பது நம்பிக்கை.
இந்த தேதியில் பிறந்தவர்களை சனி பகவான் ஆட்டிப்படைக்க போகிறார்.. 2024-ல் கவனமா இருங்க..
எனவே தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பால் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களின் வருகையால் திருநள்ளாறு திருவிழா கோலம் பூண்டுள்ளது.