பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் செல்ல முறையாக வழிவகை செய்யாததால் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். நேற்று புத்தாண்டை முன்னிட்டு இக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திரண்ட நிலையில் ராஜகோபுரம் வழியாக நீண்ட வரிசையில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் அம்மணி அம்மன் கோபுரம் வழியே பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே செல்ல வரிசை முறையாக செய்யாததால் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டி அடித்து கொண்டு கோயிலுக்கு உள்ளே செல்ல முற்பட்டனர்.
இதையும் படிங்க;- குரு வக்ர நிவர்த்தி : இந்த ராசிகளுக்கு அமோக காலம்.. தொட்டதெல்லாம் வெற்றி தான்..
அப்போது பக்தர்கள் ஒருவருக்கு ஒருவரை தாக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கோவில் நிர்வாகம் அறங்காவலர் குழு ஆகியவை இருந்தும் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முறையாக வழிவகை இல்லை என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.