Palani Murugan Temple: பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா.. முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை..!

By vinoth kumar  |  First Published Dec 31, 2023, 11:36 AM IST

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலிலுக்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருகை  தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.


பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவை துவங்க இருப்பதை முன்னிட்டு முன்னேற்பாடு வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோட்டாச்சியர்  தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலிலுக்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருகை  தந்து சாமி தரிசனம் செய்வார்கள். வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.  இத்திருவிழா தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- 2024ல் சனி பகவான் ‘இந்த’ 6 ராசிக்காரர்களை பணக்காரராக்குவார்… உங்க ராசி இதுல இருக்கா செக் பண்ணுங்க ..?

இதில் முக்கிய நிகழ்வான  ஏழாம் திருவிழா அன்று பூசம்  நட்சத்திரத்தன்று தைப்பூச திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வருகை தருவார்கள். இதற்கான பக்தர்களுக்கு  குடிநீர், தங்கும் இடங்கள், கழிவறைகள், வாகன நிறுத்துமிடங்கள் ,பேருந்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட முன்னேற்பாடு வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம்  பழனி திருக்கோவில் தலைமை அலுவலகத்தில் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.  

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, காவல்துறை அதிகாரிகள், மின்வாரிய ஊழியர்கள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை, போக்குவரத்து காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

click me!