தொடர் விடுமுறை.. பழனி முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!

By vinoth kumar  |  First Published Dec 24, 2023, 11:27 AM IST

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். 


தொடர் விடுமுறையை அடுத்து பழனி முருகன் கோயிலில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் 3 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இன்று கார்த்திகை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை, அரையாண்டு தேர்வு விடுமுறை, ஐயப்ப பக்தர்கள் வருகை என்பதாலும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர். 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- சனி பகவானை வழிபட சிறந்த நேரம் இதுதான்... பூஜையின் போது இந்த தவறை செய்யாதீர்கள்!

மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையத்தில் இரண்டும் மணி நேரம் வரையும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் தரிசனம் செய்ய 3 அல்லது 4 மணிநேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுபடுத்தும் விதமாக குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் மலைக்கு நடந்து செல்லவும் படிப்பாதை வழியாக கீழே இறங்கி வர கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று கிருத்திகை தினம் என்பதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த  ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

click me!