Spiritual: அசைவம் சாப்பிட்ட பின் கோவிலுக்கு செல்லலாமா? பூஜை செய்யலாமா? தேச மங்கையர்கரசி கூறுவது என்ன?

Published : Aug 11, 2025, 02:46 PM IST
desa mangayarkarasi

சுருக்கம்

நம்மில் பலருக்கும் அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லலாமா, பூஜைகள் செய்யலாமா என்பது குறித்த சந்தேகங்கள் இருக்கும். அதற்கு பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி அளித்துள்ள விளக்கங்களை இந்த பதிவில் பார்க்கலாம். 

உணவுக்கும், மனதுக்கும் தொடர்பு உண்டு

இந்து மதத்தில் கோவிலுக்கு செல்வது என்பது இறைவனை வணங்குவதற்காகவும், புண்ணியத்தை பெறுவதற்காகவும், மனதை தூய்மைப்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படும் ஒரு ஆன்மீகப் பயணமாகும். இதற்கு உடல் மற்றும் மனதின் தூய்மை அவசியமானதாக கருதப்படுகிறது. இந்து மத கோட்பாட்டின்படி நாம் உண்ணும் உணவுக்கும், மனதில் நிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உதாரணமாக தயிர் அதிகமாக உண்பது தூக்கத்தை ஏற்படுத்தலாம். காரமான உணவு கோபத்தை உண்டாக்கலாம். அசைவ உணவுகள் உடலில் மந்த நிலையை ஏற்படுத்தலாம். மேலும் இந்து மதத்தில் அகிம்சை ஒரு முக்கியமான கொள்கையாகும். பிற உயிர்களுக்கு தீங்கு செய்வது, பிற உயிர்களை கொல்வது பாவத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்குச் செல்லலாமா?

இந்த நிலையில் அசைவம் சாப்பிட்ட பின்னர் கோவிலுக்கு செல்லலாமா கூடாதா என்பதற்கான விளக்கங்களை தேச மங்கையர்க்கரசி அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, “உணவு என்பது மனிதனின் உணர்வுகள் மற்றும் எண்ணங்களுடன் நெருங்கிய தொடர்புடையது. அசைவ உணவானது மந்த புத்தியை தரக்கூடியது. அசைவம் சாப்பிட்டாலே தூங்க வேண்டும், ஓய்வெடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றும். வேலை செய்ய வேண்டிய சுறுசுறுப்பை தராது. அசைவ உணவின் தன்மையே மந்த நிலையை தரக்கூடியது. ஒரு உயிரை கொன்று, அதை தின்றுவிட்டு கோவிலுக்கு செல்பவர்கள் தங்களை ஒரு பக்திமான் என்று கூறிவிட முடியாது. இரக்க குணம் என்பது வேண்டும். “எல்லா உயிர்களிலும் இறைவன் நிறைந்திருக்கிறான்” என்ற கூற்றை மனதில் கொள்ள வேண்டும்.

ஜீவகாருண்யம் பின்பற்ற வேண்டும்

கடவுள் முன்பு நாம் நிற்கும் பொழுது உண்மையான அன்பு, உண்மையான பக்தி, இரத்த குணத்துடன் நிற்க வேண்டும். எப்படி வாழ்க்கைக்கு ஒழுக்கம் முக்கியமானதோ அதுபோல பக்திக்கு ஒழுக்கம் ஜீவகாருண்யம் ஆகும். எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்கிற கோட்பாடுகளை கொண்டவர்கள் தெய்வ நிலைக்கு சமமானவர்கள். இந்த கொள்கைகளை கொண்டவர்கள் கேட்டால் இறைவன் மறுக்காமல் கொடுப்பான் என்பது நம்பிக்கை. இரக்ககுணம் இருக்கும் இடத்தில் பக்தி நிறைந்திருக்கும். பக்தி இருக்கும் இடத்தில் இறைவன் நிறைந்திருப்பான். எனவே நமது ஆன்மீக முன்னோர்களும், பெரியோர்களும் கூறியது போல அசைவ உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். அசைவ உணவு உண்டு விட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது.

திருக்குறளில் கூறப்பட்டுள்ள செய்திகள்

திருவள்ளுவர் தனது புலால் மறுத்தல் என்கிற அதிகாரத்தில் பல குறள்களை மேற்கோள்காட்டி இருக்கிறார். “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” என்கின்ற ஒரு குறளில் புலால் உணவுகளை மறுத்தவர்களை உலகில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். மற்றொரு குறளில் “தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙணம் ஆளும் அருள்” என்று கூறியிருக்கிறார். அதாவது தன் உடம்பை வளர்ப்பதற்கு பிற உயிரை கொன்றுதான் வளர்க்க வேண்டுமா? அவர் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு குறளில் “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்சொரிந்து உண்ணாமை நன்று” என்று கூறியுள்ளார். அதன் பொருள் ஆயிரம் வேள்வி செய்வதற்கும் ஒரு உயிரை கொல்லாமல் இருப்பதற்கு சமம் என்பதே ஆகும்.

பூஜை அறைக்குள் செல்லக்கூடாது

திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகள் கூறும் பொழுது, ஆட்டை அறுக்கும்பொழுது ஒருவன் கண்ணில் நீர் வந்தால் அவன் சைவம் என்றும், நாக்கில் நீர் வந்தால் அவன் அசைவம் என்றும் நாம் தெரிந்து கொள்ளலாம். அசைவமானது தாமச குணத்தை தரும் என்று கூறி இருக்கிறார். எனவே பூஜை செய்யும் பொழுதோ, கோவிலுக்குச் செல்லும் பொழுதோ அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள் ருத்ராட்சம் அணிவதை தவிர்க்க வேண்டும். அசைவத்தை விட முடியாதவர்கள் பூஜை நேரத்தில் மட்டும் ருத்ராட்சத்தை அணிந்து கொள்ள வேண்டும். அசைவம் சமைக்கும் போது, சாப்பிடும் போது கண்டிப்பாக ருத்ராட்சம் அணியக்கூடாது. பெண்களுக்கு, நாங்கள் அசைவ உணவு சமைக்கிறோம், ஆனால் சாப்பிடுவதில்லை, எனவே நாங்கள் பூஜை அறைக்க சென்று விளக்கு ஏற்றலாமா என்ற சந்தேகம் எழுகிறது.

ருத்ராட்சம் அணியக்கூடாது

இதற்கு ஒரு தீர்வு உள்ளது. காலையிலேயே எழுந்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டால் இந்த பிரச்சனையை எழுவதில்லை. அதன் பின்னர் நீங்கள் அசைவம் சாப்பிடுவது தனிப்பட்ட விருப்பம். அசைவம் சாப்பிட்டுவிட்டு குளித்தால் தோஷம் போகாது. அதேபோல் வயிற்றில் அசைவ உணவுகளை வைத்துக்கொண்டு கந்த சஷ்டி கவசம் படிப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபடக்கூடாது. விரத நாட்கள், அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் அசைவம் உண்ணக்கூடாது. ஒருவேளை அசைவம் சாப்பிட்ட நேர்ந்தால் கோவிலுக்கு செல்வதை தவிர்த்து விடுங்கள். சிலர் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்ற நாட்களில் விரதம் இருப்பவர்கள், அந்த தினங்களிலும் அசைவ உண்ணக்கூடாது.

சைவ உணவே சிறந்தது

அசைவம் சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது என்ற எந்த கருத்துக்களையும் தான் கூறவில்லை. உணவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் உடல் மற்றும் மனதின் தூய்மையை பேணுவதற்கு சைவ உணவு முறையை பின்பற்றுவது நல்லது என்று தேச மங்கையர்கரசி விளக்கம் அளித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!