திருமணமான பெண்கள் நெற்றியில் கருப்பு பொட்டு வைக்கலாமா..? சாஸ்திரம் சொல்வது என்ன..??

By Kalai Selvi  |  First Published Mar 12, 2024, 11:07 AM IST

பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கும் முன் சில ஜோதிட விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அது உங்கள் திருமண வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியும் செழிப்பையும் தரும்.


இந்திய கலாச்சாரத்தில் இந்து மதத்தில் பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது வழக்கம். பொதுவாகவே இதை பேஷனுக்காக சிலர்  வைப்பார்கள். இன்னும் சிலரோ தங்கள் ஆடைகளுக்கு பொருத்தமான நிறத்தில் வைப்பார்கள். ஆனால் திருமணமான பெண்கள் எந்த நிறத்தில் வைக்க வேண்டும் தெரியுமா..? ஏனெனில் பொட்டு என்பது வேதங்களில் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது. இது நெற்றியின் நடுவில் வைக்கப்படுவதால் உங்கள் உடலின் ஏழு சக்கரங்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், திருமணமான பெண்கள் கருப்பு பொட்டு வைக்கலாமா என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

undefined

நெற்றியில் பொட்டு வைப்பதன் கலாச்சாரம் மற்றும் மதம் முக்கியத்துவம்:
ஜோதிடம் படி கலாச்சார ரீதியாகவும் மத ரீதியாகவும் பொட்டு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது பொட்டை பெண்கள் நெற்றியில் வைப்பது கலாச்சாரத்திற்காகவும், அழகுக்காகவும், மூன்றாவது கண்ணுடன் தொடர்புடையது. இந்த மூன்றாவது கண் உள்ளுணர்வு மற்றும் ஆன்மீக விழிப்புணர்வுடன் தொடர்புடைய தெய்வீக பார்வையின் அடையாளமாகும். மேலும், உங்கள் உள் அறிவு மற்றும் உங்கள் புத்திசாலித்தனமும் அதிகரிக்கும்.

பொட்டின் நிறங்கள் மற்றும் கிரகங்களின் தாக்கம்:
நெற்றியில் வைக்கப்படும் பொட்டுக்கள் வெவ்வேறு நிறத்தில் உள்ளன. அந்த நிறங்கள் கிரகங்களுடன் தொடர்புடையது என்று நம்பபடுகிறது. அதன்படி சிவப்பு நிறம் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது. மேலும், சக்தி மற்றும் திருமண மகிழ்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறது. அதுபோல், இந்த நிறம் திருமணமான பெண்களுக்கு நேர்மறை ஆற்றலை தூண்டும். அதனால் தான் திருமணமான பெண்கள் பலர் நெற்றியில் இந்த நிறத்தில் பொட்டு வைப்பார்கள்.

அதுபோலவே, கருப்பு பொட்டு சனி கிரகத்துடன் தொடர்புடையது. ஏனெனில் சனியின் நிறம் கருப்பு. இந்த கிரகம் ஒழுக்கம் சகிப்புத்தன்மை மற்றும் மாற்றத்தை குறிக்கிறது. கர்ம பாராயணத்துடன் தொடர்புடைய கிரகமாக சனி கருதப்படுகிறது. கருப்பு பொட்டு எதிர்மறை சக்தியை ஈர்க்கிறது என்று நம்பப்படுகிறது. இது உங்கள் திருமண வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:  நெற்றியில் விபூதியோ குங்குமமோ இல்லாமல் இருக்க கூடாது..ஏன் தெரியுமா?

திருமணமான பெண்கள் கருப்பு பொட்டு வைக்கலாம்?
சாஸ்திரங்களின்படி, திருமணமான பெண்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு அல்லது வேறு எந்த நிறத்திலும் பொட்டு வைக்கலாம். ஆனால் கருப்பு நிறத்தில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், கருப்பு நிறம் சனி மற்றும் ராகு இருவரது நிறமாக கருதப்படுகிறது. இந்த நிறத்தின் பொட்டு நீங்கள் வைத்தால் உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

மேலும், இந்த நிறத்தில் பொட்டு வைப்பது பரஸ்பர தகராறுகளை அதிகரிக்கும் மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்கதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. எனவே, திருமணமான பெண்கள் கருப்பு பொட்டு வைப்பது தவிர்ப்பது நல்லது. இருப்பினும் திருமணமாகாத பெண்கள் இந்த நிறத்தில் பொட்டு வைக்கலாம். ஆனால், ஜோதிட சாஸ்திரம்படி, கருப்பு பொட்டு எதிர்மறை ஆற்றல் நெற்றியில் சேர்க்கப்பட்டு உடல் முழுவதும் பரவத் தொடங்குகிறது. எனவே, இந்த நேரத்தில் பொட்டு வைப்பது சாஸ்திரங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு வையுங்கள்;  முகத்தில் அழகு கூடும்..!!

கருப்பு பொட்டு பயன்படுத்தும் மற்றொரு வழி:
நீங்கள் கருப்பு போட்டு பயன்படுத்த விரும்பினால், அதை ஒருபோதும் தனியாக பயன்படுத்தக் கூடாது. வேறு எந்த நிறத்துடன் சேர்த்து இதை நீங்கள் பயன்படுத்தலாம். ஏனெனில், அவை எதிர்மறையான விளைவை ஏற்படுத்தாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!